பட்டா சிட்டா தகவல்

பட்டா சிட்டா தகவல் ( Patta Chitta thagaval ) - பட்டா மற்றும் சிட்டாவின் தகவல்கள் அதாவது விவரங்களை எவ்வாறு அல்லது எப்படி காண்பது என்று இங்கே விரிவாக காணலாம். பொதுவாக பட்டா என்பது நில உரிமையாளர் பெயரும் சிட்டா என்பது நிலத்தின் தன்மை போன்ற விவரங்கள் காட்டும். கம்ப்யூட்டர் ஏற்றுவதற்கு முன்னர் இந்த பட்டா, சிட்டா எல்லாம் தனி தனியாகவும் மற்றும் வருவாய் துறை அலுவலகத்திலும் மட்டுமே கிடைக்கும். ஒரு முறை தொலைந்துவிட்டால் நீண்ட நாட்கள் கழித்து தான் பெற முடியும்.


பட்டா சிட்டா தகவல்


பட்டா சிட்டா எடுத்தல்

ஆனால் இப்போது அந்த கவலை நமக்கு தேவை இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் நம்மால் பட்டாவை சிட்டாவை எளிதாக மற்றும் வீட்டில் இருந்தபடியே எவ்வித கட்டணம் இல்லாமலும் பெறலாம். அதற்கு மேலே மற்றுமொரு நல்ல செய்து இருக்கிறது. அது என்னவென்றால் பட்டா எண், சர்வே எண் மற்றும் பெயர் இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலே அதன் நகலை எடுத்து கொள்ளலாம். இது போன்ற வசதிகள் பெற நீங்கள் Eservices வெப்சைட் சென்று பார்க்கலாம்.இது மட்டுமே இந்த இணையதளத்தில் இருக்கிறதா என்று கேட்டால் அந்த முற்றிலும் தவறு. ஏனென்றால் ஒரே ஒரு பக்கத்தில் பட்டாவையும் சிட்டாவையும் காணலாம். இது போன்ற வசதிகள் 2000 வருடத்திற்கு முன்னர் இல்லை. அதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.


பட்டா சிட்டா புகைப்படம்

இந்த புகைப்படத்தினை பெற வெறும் ஒரு நிமிடம் மட்டுமே போதும். மேலே கூறிய வழிமுறைகளை பின்பற்றி செய்யும் முறை மாதிரி புகைப்படம் அதாவது வரைபடத்தினை பார்க்க முடியும். இதற்கும் ஏதாவது உங்கள் லேண்ட் விவரங்கள் அதாவது பட்டா நம்பர், புல எண் அல்லது பெயர் இதில் ஒன்றை மட்டுமே யூஸ் செய்து புகைப்படத்தை எடுக்கலாம்.மேலே உள்ள வரைபடம் ஒரு லேண்ட் உரிமையாளரின் நிலத்தின் புகைப்படம் ஆகும். இதில் 1B, 1A மற்றும் 3A உட்பிரிவை குறிக்கும். அதாவது ஒரு நிலத்தின் அளவு, சென்ட் என்பதை சரியாக காட்ட கூடிய படம் தான் இது.


பட்டா சிட்டா விபரம்

விவரங்கள் அனைத்தும் நகலிலே இருக்கும் என்பதனால் அதனை எளிதாக நாம் காண முடியும். எந்த வருவாய்த்துறை அலுவலகத்தை சேர்ந்தது, எத்தனை சென்ட் இடம் இருக்கிறது, கூட்டு பட்டாவா அல்லது தனி பட்டாவா, நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா, தீர்வை கட்டணம் எவ்வளவு போன்ற அனைத்து விஷயங்களும் இந்த நகலில் இருக்கும்.

இதையும் படியுங்க: பட்டா நகல் பெறுவது எப்படி