முத்திரைத்தாள் என்றால் என்ன - முத்திரைத்தாள் என்பது ஒரு பரிவர்த்தனை நடக்கும்போது அரசாங்கத்திற்கு வரியாக செல்லும் பணம் முத்திரைத்தாள் வழியாக அரசு கருவூலத்திற்கு செல்லும். இதனைத்தான் முத்திரை தாள் என்பர். பரிவர்த்தனை என்றால் குத்தகை பத்திரம், வீடு கட்டுமான ஒப்பந்தம், பத்திரம், கிரையம், தானம் மற்றும் செட்டில்மென்ட் பத்திரங்களில் பதிவு கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணங்கள் கட்டுவோம். அதனை நாம் இதன் வழியாக தான் பணம் பரிமாற்றம் செய்கிறோம்.
இதற்கான கட்டணங்கள் பத்திரங்களுக்கு பத்திரம் வேறுபடும் என்பதே உண்மை. பத்திரம் பதிவு செய்யும்போது முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவாளர் கட்டணம் என்று இரண்டு கட்டணங்களாக பத்திரம் பதிவு செய்பவர் கட்ட வேண்டும். ஆனால் பதிவு செய்பவர்கள் சூழ்நிலையில் கட்டணங்களை அவர்களே குறைத்து பதிவு செய்கின்றனர். இதனால் அரசாங்கத்திற்கு கோடி கணக்கில் வருவாய் இழப்பீடு ஆகிறது. அதனை சரிகட்டவே அரசாங்கம் இப்போது நல்ல முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முத்திரை தீர்வை
சம்மந்தப்பட்ட சார் பதிவாளர் அதனை கண்டுபிடித்து பதிவு செய்பவரிடம் மீதி தொகையை வாங்கி கொள்ளலாம். அதும் மாவட்ட சார் பதிவாளர் தான் கேட்க வேண்டும். மேலும் மூன்று வருடத்திற்குள்ளேயே அதனை கண்டுபிடித்து தொகையை வாங்கி கொள்ளமுடியும். இதையே மூன்று வருடங்களுக்கு மேலே சென்றால் கண்டிப்பாக சம்மந்தப்பட்ட பதிவு செய்தவரிடம் எந்தவித கட்டணமும் கட்ட தேவையில்லை. இதனை தான் இந்திய ஸ்டாம்ப் சட்டம் 33 உட்பிரிவு A சொல்கிறது.