நிலம் அளக்கும் முறை, நிலத்தை அளப்பது எப்படி

நிலம் அளக்கும் முறை, நிலத்தை அளப்பது எப்படி, நிலம் அளவீடு செய்வது எப்படி - நிலங்களை அளந்து தான் நாம் எப்போதும் இவ்வளவு சென்ட், சதுர அடி, கிரௌண்ட் என்றெல்லாம் கூறுவோம். ஆனால் அதனை எவ்வாறு அளப்பது போன்ற விஷயங்கள் பிளாட் வாங்கும் ஒரு சிலருக்கு தெரியாது. ஏனென்றால் நாம் தான் நிலத்தை வாங்கி விட்டோம் என்று ஒரு அஜாக்கிரதை தான். அதனை இனிமேல் செய்ய வேண்டாம். ஒவ்வொரு முறையும் அல்லது எப்போதாவது பிளாட் வாங்கும் மக்கள் எப் எம் பி வரைபடத்தையும் கிராம வரைப்படத்தையும் பார்ப்பதில்லை. கண்டிப்பாக அதனை ஒவ்வொருவரும் பார்த்த பின்னர் தான் நிலங்களையோ அல்லது வீடுகளையோ வாங்க வேண்டும்.

நிலம் அளக்கும் முறை


நடைபாதை, பொதுப்பாதை, நிலவியல் பாதை மற்றும் வண்டிப்பாதை போன்ற பாதைகள் எப் எம் பி ஸ்கெச் இல் சரியாக காட்டி விடும். ஒருவேளை இவற்றுள் ஏதாவது உங்கள் நிலத்திற்குள் வந்து விட்டால் அதனை எப்போது வேண்டுமானாலும் அரசாங்கம் ஆக்கிரமிப்பு செய்வதற்க்கு அதிக வாய்ப்புண்டு.

பட்டா சிட்டா

நம்முடைய நிலத்தினை நம்மாலே அளக்க முடியுமா என்று கேட்டால் கண்டிப்பாக நம்மால் முடியும். முதலில் உங்கள் நிலம் எந்த வடிவத்தில் இருக்கிறது என்று பார்க்கவும். அதாவது சதுர வடிவில், செவ்வக வடிவில் அல்லது வெவ்வேறு கோணங்களில் இருக்கிறதா பார்த்த பின்னர் நிலங்களை அளக்க தயாராகுங்கள். நில அளவை பற்றி சிறிது தெரிந்தால் போதுமானது. உங்களுடைய நிலம் எத்தனை சதுர அடியில் இருப்பதை எளிமையாக பார்க்கலாம்.

நிலம் அளக்க கலெக்டரிடம் மனு

ஒரு டேப் எடுத்து முதலில் ஒரு முனையை சூஸ் செய்யுங்கள். டேப்பில் மேலே அடி கணக்கும், இன்ச்சும் கீழே சென்டி மீட்டரில் இருக்கும். 12 இன்ச் மற்றும் 30.48 சென்டி மீட்டர் சேர்ந்தது ஒரு அடியாகும். மீட்டர் கணக்கில் டேப் இருந்தால் 1 மீட்டருக்கு 3.28 அடி கணக்கை நினைவில் கொள்ளுங்கள். 1 சதுர மீட்டர் 10.76 சதுர அடியாகும். இந்த கணக்குகள் தெரிந்தாலே பாதி வேலை முடிந்து விடும். இதனை தவிர்த்து 1 ஏக்கர் இருந்தால் 100 சென்டும், 100 சென்ட் என்பது 43560 சதுர அடியும் வரும். இந்த 43560 சதுர அடியை சதுர மீட்டரில் சொன்னால் 4048 சொல்லலாம். இந்த கணக்கீடுகள் பொதுவாக அடி கணக்கில் மற்றும் சென்ட் கணக்கில் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்தி உங்கள் வீட்டின் அல்லது மனையின் அளவுகளை அறிந்து கொள்ள முடியும்.