தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 2022 ஒதுக்கீடு பட்டியல்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 2022 ஒதுக்கீடு பட்டியல்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 2022 ஒதுக்கீடு பட்டியல் - இன்றைய சூழ்நிலையில் வீடு இல்லாதவர்கள் லிஸ்ட் மிகவும் அதிகமாகி வருகிறது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் சேர்ந்து அனைவருக்குமே வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தியது. இதில் தமிழ்நாடு அரசு 1947 ஆம் ஆண்டு நகராட்சி மேம்பாடு குழுமம் ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு 1961 ஆகும். மாநிலம் முழுவதும் மேம்படுத்த 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தை ஆரம்பித்தது. அதாவது நகர் மேம்பாட்டு திட்டத்தை வீட்டு வசதி வாரியமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது. இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் பயனடைந்து வந்தார்கள்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 2022


இந்த திட்டம் மாத வருமான அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. அதாவது 12, 000 முதல் அதற்கு மேல் வருமானம் கொண்டவர்களும் இதற்கு தகுதியானவர்களாக கருதப்படுகிறார்கள். வருமானம், இட ஒதுக்கீடு, வகை ஒதுக்கீடு முறையில் வீடுகள், மனைகள் எல்லாம் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு இருபத்தி ஒன்று முழுமையாகவும், இதற்கு முன் அரசாங்கம் சார்பில் வேறு ஒரு வீடும் வாங்காமலும், தமிழ்நாட்டினை பூர்வீகமாகவும் கொண்டவராக இருத்தல் நல்லது. விண்ணப்பங்களை நேரிலும்  ஆன்லைனும் பெற்று பூர்த்தி செய்து அதற்கான கட்டணத்தை வரைவோலை மூலமாகவும் அல்லது நேரில் சென்றும் கொடுக்கலாம். தகுதியான மக்களுக்கு மொத்த கொள்முதல் அல்லது தவணை கொள்முதல் மூலம் வீடுகள் மற்றும் மனைகள் பெறலாம்.

குடிசை மாற்று வாரியம் வீடு கட்டும் திட்டம் 2022

மொத்த கொள்முதல் வீடு

ஒட்டுமொத்தமாக முழுப்பணத்தை 30 நாட்களுக்குள் செலுத்தி வீடுகளை பெற்று கொள்ளலாம். அப்படி முப்பது நாட்களுக்குள் பணத்தை செலுத்தாவிட்டால் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடு மற்றவர்களுக்கு சென்று விடும்.

தவணை கொள்முதல் வீடு

ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளை தவணை மூலமாக கட்டி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் 40 சதவீத வைப்பு தொகையாக முதலில் செலுத்தி ரசீது வாங்க வேண்டும். பின்னர் 5 வருடங்கள் முதல் 14 வருடங்கள் வரை தவணை முறையில் மாத மாதம் பணம் செலுத்தலாம். இதில் அவர்கள் கட்ட சொல்லும் தேதியில் பணம் செலுத்தாவிடில் 3 சதவீதம் அபராதங்கள் விதிக்கப்படும்.

புகார்கள் தெரிவிக்க

வீடுகள் வாங்கிய பின்னர் ஏதாவது குறைகள் தென்பட்டால் திங்கள் கிழமையன்று ஒதுக்கீடு நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு உங்கள் மனுக்களை கொடுக்கலாம். இதில் நீங்கள் எதிர்பார்க்கும் அடுக்குமாடி வீடுகள், தனி வீடுகள் மற்றும் வாடகை வீடுகளும் கிடைக்கும். இதில் அதிகமாக சென்னை போன்ற பெரிய பெரிய நகரங்களுக்கு புதிய திட்டங்கள் 2022 அப்ரூவல் ஆகறது.

நிலம் வேறு பெயர்கள்