தமிழ்நாடு மேயர் பட்டியல் 2023

தமிழ்நாடு மேயர் பட்டியல் 2023 அதிகாரங்கள் பணிகள் மற்றும் பதவி காலம் - மேயர் என்னும் சொல் மேயோர் என்கிற சொல்லில் இருந்து வந்தது ஆகும். ஒரு மேயர் எனப்படுபவர் ஒரு குறிப்பிட்ட நகரம் அல்லது பெரிய நகரத்துக்கு பொறுப்பானவர் அல்லது தலைவர் ஆவார். இவர் பெரும்பாலும் மாநகராட்சியில் தான் மேயராக இருப்பார். நகராட்சி மற்றும் பேரூராட்சியில் இருக்கமாட்டார். அங்கு தலைவர் மற்றும் துணை தலைவர் மட்டுமே செயல்படுவர்.

தமிழ்நாடு மேயர் பட்டியல் 2023


மேயர் பதவி என்றால் என்ன

மேயர் பதவி என்பது ஒரு இடங்களில் அல்லது பகுதிகளில் உள்ள திட்டங்களை வழிவகுத்தல், தீர்மானங்களை நிறைவேற்றுதல் போன்ற செயல்பாடுகளை செய்தல் இவருடைய மிகவும் முக்கியமான பணிகள் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தமாக 21 மாநகராட்சிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு மாநகராட்சிக்கும் ஒவ்வொரு மேயரை நியமனம் செய்கிறார்கள். ஒவ்வொரு மேயருக்கும் ஒரு துணை மேயர் நியமனம் செய்யப்படுவார். எப்படி இந்திய குடியரசு தலைவர் நாட்டின் முதல் குடிமகனாக இருக்கிறாரோ அதேபோல் ஒரு மாநகராட்சிக்கு முதல் குடிமகன் இந்த மேயர் ஆவார்.

லோக்சபா ராஜ்ய சபா என்றால் என்ன

மாநகராட்சி மேயர் சம்பளம் மற்றும் பணிகள்

இவரை கவுன்சிலர்கள் தேர்ந்து எடுப்பார்கள். அதாவது மறைமுக தேர்தல் மூலம் கவுன்சிலர்கள் இவரை நியமனம் செய்கிறார்கள். இவருடைய சம்பளம் என்று பார்த்தால் ஏதும் இல்லை. கவன்சிலர்களை கூட்டம் கூட்டி வளர்ச்சி திட்டங்கள் மற்றும் தீர்மானங்களை எடுக்க அல்லது நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறார். இவருக்கு அரசாங்க சார்பில் பயணம் செய்ய இலவச கார், வீடு மற்றும் இதர செலவுகளை அரசே பார்த்து கொள்ளும். இதேபோல் துணை மேயருக்கும் செய்வார்கள். மேயர் பதவி காலம் எத்தனை ஆண்டுகள் என்றால் மற்றவர்களை போல் இவர்களுக்கும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே.

இவரிடம் எந்த வித தீர்மானங்களையும் நிறைவேற்ற சொல்லி மனுக்கள் கொடுக்கலாம். ஆனால் அதனை முறையாக நிறைவேற்றவும் அல்லது நிராகரிக்கவும் முழு உரிமையும் இவருக்கு உண்டு. இவர் ஒரு கோடி ரூபாய் வரையும் அவரச திட்டங்களை நிறைவேற்ற எடுத்து கொள்ளலாம். பிறகு கவுன்சிலர்களிடம் சேர்ந்து ஒப்புதல் வாங்கி கொள்ளலாம்.

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை

21 மாநகராட்சி மேயர்கள் லிஸ்ட்

1. நாகர்கோவில் - திரு. மகேஷ்

2. சிவகாசி - திருமதி. சங்கீதா இன்பம்

3. திண்டுக்கல் - திருமதி. இளமதி

4. ஓசூர் - திரு. எஸ். ஏ. சத்யா

5. கோவை - திருமதி. கல்பனா

6. சேலம் - திரு. ஏ. இராமச்சந்திரன்

7. திருப்பூர் - திரு. தினேஷ்

8. ஈரோடு - திருமதி. நாகரத்தினம்

9. தூத்துக்குடி - என்.பி. ஜெகன்

10. ஆவடி - திரு. ஜி. உதயகுமார்

11. தாம்பரம் - திருமதி. வசந்தகுமாரி

12. காஞ்சிபுரம் - திருமதி. மகாலக்ஷ்மி

13. வேலூர் - திருமதி. சுஜாதா

14. கடலூர் - திருமதி. சுந்தரி

15. தஞ்சாவூர் - திரு. சண். இராமநாதன்

16. கரூர் - திருமதி. கவிதா

17. சென்னை - திருமதி. ஆர். பிரியா

18. மதுரை - திருமதி. இந்திராணி

19. திருச்சி - திரு. அன்பழகன்

20. திருநெல்வேலி - பி. எம். சரவணன்

21. கும்பகோணம் - திரு. கே. சரவணன்.