-->
இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை - பாராளுமன்றம் என்கிற சொல்லுக்கு நாடாளுமன்றம் என்றும் கூறலாம் அல்லது பார்லிமென்ட் என்றும் சொல்லலாம். பாராளுமன்றங்கள் புது டெல்லியில் கூடுகிறது. இந்த நாடாளுமன்றங்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவை என்று இரண்டாக பிரித்து கொள்வர். அதாவது மக்களவை என்பது நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர். ஆனால் மாநிலங்களவை மறைமுக தேர்தல் மூலம் அதாவது சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை


இந்த அவைகளை குடியரசு தலைவர் தான் நிர்வாகம் செய்வார். இவர் பெயரளவில் மட்டுமே நிர்வாகம் செய்தாலும் முழு அதிகாரமும் இந்திய பிரதமருக்கு தான் உள்ளது. குடியரசு தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்கவை இவை மூன்றும் தான் நாடாளுமன்றம் ஆகும். மொத்தமாக பட்ஜெட், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என மூன்று வெவ்வேறு கூட்டங்களை கூடி சட்டங்களை நிறைவேற்றுவர். இந்த பாராளுமன்றத்தை நோக்கம் சட்டம் இயற்றுதல் ஆகும்.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் 2022

இந்த சட்டங்களை ஒப்புதல் செய்வதற்கு மக்கள் அவை மற்றும் மாநிலங்கள் அவை என இரண்டு தரப்பினரும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். இந்த இரண்டு தரப்பினரும் சம்மதம் தெரிவித்த பின்னர் குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். குடியரசு தலைவர் ஒப்புதல் இருந்தால் தான் அந்த சட்டங்கள் நடைமுறைக்கு வரும்.

இந்திய நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 2022

தற்போதைய மக்களவை தலைவர் திரு பிர்லா அவர்களும் மாநிலங்கள் அவை தலைவர் திரு வெங்கையா அவர்களும் பதவி வகிக்கின்றனர். தற்போது வரையும் மக்களவையில் 543 மற்றும் 2 உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல் மாநிலங்கள் அவையில் 233 மற்றும் 12 உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தமாக 788 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எம் பி ஆக உள்ளனர்.

வருவாய் கிராமம் என்றால் என்ன