சொத்து வரி online payment

சொத்து வரி online payment ( sothu vari online payment chennai coimbatore ) - மாநகராட்சியில் மற்றும் நகராட்சியில் சொத்து வரி என்றும் கிராமப்புறங்களில் வீட்டு வரி என்றும் அழைக்கிறோம். காலியாக ஒரு மனை இருந்தாலே அதற்கு நிச்சயமாக வரி செலுத்த வேண்டும். இது இடத்திற்கு இடம் மற்றும் சதுர அடிக்கு வேறுபட்டவை.

சொத்து வரி online payment


இதில் உள்ள ஒரு விதி விலக்கு என்னவென்றால் ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்தில் வருகின்ற சொத்து வரியை முழுமையாக கட்ட முடிவில்லை என்றாலும் அதில் ஒரு பகுதியையும் அதே சமயத்தில் முன்கூட்டியே பணமும் செலுத்தலாம்.

இதையும் பார்க்க: பேரூராட்சி வீட்டு வரி

நேரடியாக அலுவலகம் சென்றும் கட்டணங்கள் கட்டலாம். அப்படி நேரில் செல்ல முடியாதவர்கள் ஆன்லைனில் கட்டலாம். மாநகரம் மற்றும் நகர புறங்களில் இருக்கின்ற மாநகராட்சி ஆணையகம் மற்றும் நகராட்சி ஆணையகம் சென்று கட்ட வேண்டும். கிராம புறங்களில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் கட்ட வேண்டும்.

இதையும் பார்க்க: பஞ்சாயத்து வீட்டு வரி

சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பெரிய பெரிய மாநகரங்களில் chennaicorporation மற்றும் ccmc வெப்சைட்யை பயன்படுத்தி கட்டலாம். மற்ற நகரங்களுக்கு Tnurbanepay வெப்சைட் யை பயன்படுத்தவும். மேலும் கிராம ஊராட்சியில் வசிக்கும் மக்கள் Vptax என்கிற இணையத்தை பயன்படுத்தலாம்.