சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றிதழ் ( New )

சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றிதழ் ( சான்று ) - சொத்தின் அடிப்படையில் யார் யாருக்கு சொத்தானது பரிமாற்றம் நடந்தது, தற்போது யார் பெயரில் வந்தது மற்றும் அதன் ஆவண தன்மை என பல்வேறு தகவல்களை கொண்டிருப்பது தான் இந்த வில்லங்க சான்று. ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும் நாம் இலவசமாக வில்லங்க சான்றிதழை பெற்று கொள்ள முடியும்.

சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றிதழ்


இந்த சொத்து தொடர்பான வில்லங்கம் என்பது அனைத்து தகவல்களையும் Tnreginet வெப்சைட் மூலமாக நமக்கு காண்பிப்பது ஆகும். உதாரணமாக மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் ஆவண எண், எழுதி கொடுத்தவர் பெயர், எழுதி வாங்கியவர் பெயர், ஒப்படைப்பு ஆவணம், முந்தைய ஆவண எண்கள், சந்தை மதிப்பு, விஸ்தீரணம், செக்குபந்தி என பல்வேறு தகவல்களை கொண்டுள்ளது தான் இந்த வில்லங்க சான்றிதழ் ஆகும்.

இதையும் படிக்க: வில்லங்க சான்று online

இதனை எடுக்க tnreginet வெப்சைட் சென்று வில்லங்க சான்று பார்வையிட என்பதை தேர்வு செய்து உங்கள் மண்டலம், மாவட்டம், வருவாய் கிராமம், சர்வே எண்ணை சரியாக உள்ளிட்டால் திருத்த இயலாநிலை ஆவண வடிவத்தை பதிவிறக்கம் செய்ய என வரும். அதனை தேர்வு செய்தால் உங்கள் வில்லங்க சான்று நகல் வந்து விடும்.

குறிப்பு

மொத்தமாக மண்டலங்கள் 11 உள்ளன. அதில் உங்கள் மண்டலம் எதுவோ அதனை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

இதையும் படிக்க: பட்டா சிட்டா பாக்கணும்