சாலை வசதி வேண்டி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்

சாலை வசதி வேண்டி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் ( சாலையை சீரமைக்க வேண்டி மாநகராட்சிக்கு கடிதம் ) - இந்த விண்ணப்பம் நகராட்சி ஆணையருக்கு அல்லது ஊராட்சி மன்றத் தலைவருக்கு அல்லது மாவட்ட ஆட்சியருக்கு கூட நாம் எழுதலாம். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள் உள்ளன என்பதை நாம் அறிந்த ஒன்று தான். ஒரு மாநகராட்சி என்பது 10 லட்சம் மக்கள் மிகாமல் இருக்க வேண்டும். அந்த 10 லட்சம் மக்களை காக்க மாநகராட்சி மேயர், துணை மேயர், ஆணையர், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் வார்டு மன்ற உறுப்பினர்கள் என கணக்கில் இல்லாமல் நிறைய பேர் இதற்கு கீழ் பணிபுரிவார்கள். பொது சம்மந்தப்பட்ட பணிகளில் ஆணையருக்கு தனி முக்கியத்துவம் உண்டு. அதனால் தான் குடிநீர், மின்சாரம், தூய்மை மற்றும் சாலை வசதிகள் ஏற்படுத்தி தர முழு பொறுப்பும் இவருக்கு உண்டு.

சாலை வசதி வேண்டி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்


விண்ணப்பிக்கும் மக்கள் சரியான முகவரி கொண்டு எழுதுதல் அவசியம். மாநகராட்சி ஆணையரகம் சிறிது தொலைவில் இருந்தால் நேரிலே சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது மனுக்களை கொடுக்கலாம். தூரம், நேரம் இவற்றின் காரணத்தினால் மற்ற மக்கள் அனைவரும் ஆன்லைனிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தான் விண்ணப்பிக்கும் சூழல் உள்ளது. இதனால் தான் சரியான முகவரி கொண்டு எழுதுதல் மிக அவசியமாகும்.

பொருள்

எந்த விண்ணப்பங்கள் அல்லது மனுக்கள் எழுதுகிறீர்களோ அங்கே கண்டிப்பாக பொருள் என்பது கட்டாயமே. ஏனெனில் பொருளை பார்த்த உடனே இது தான் விஷயம் என்று படிப்பவர்கள் எளிதாக [புரிந்து கொள்வார்கள். உதாரணமாக பழுதடைந்த சாலைபுகார் கடிதம், எனது ஊரில் சாலை வசதி செய்து தருமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு விண்ணப்பம் கடிதம் எழுதுக என்று குறிப்பிட வேண்டும்.

தெருவிளக்கு வேண்டி கடிதம்

விளக்கம்

எங்கள் வார்டில், தெருவில் அல்லது பொது சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அது மட்டுமில்லாமல் அங்கு நடக்க முடியாமலும் அங்கங்கு பள்ள பள்ளமாய் இருக்கிற காரணத்தால் வேலைக்கு செல்லும் மக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், மாணவிகள், பொது மக்கள் மற்றும் முதியோர்கள் மிக மிக அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ஆணையர் அவர்கள் இந்த பிரச்சனையை சரி செய்து தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு

எந்த மனுக்கள் நீங்கள் எழுதினாலும் முதலில் வலது பக்க மூலையில் தேதியும், அடிப்பக்கத்தில் இடது பக்கம் இடம் மற்றும் தேதியும், வலது பக்க அடிப்பக்கத்தில் இங்கனம் அல்லது இப்படிக்கு மற்றும் கையொப்பம் இட்டு கொடுக்க வேண்டும்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 2023