தெருவிளக்கு வேண்டி கடிதம்

தெருவிளக்கு வேண்டி கடிதம் -  விளக்கு என்றாலே வெளிச்சம் தர கூடிய முக்கியமான பொருள்களுள் ஒன்று. முன்னர் காலங்களில் அடிக்கடி பயன்பாட்டிற்கு வந்த விளக்குகள் தற்போது 99 சதவீதம் மக்கள் பயன்படுத்துவதில்லை. எனினும் தற்போது உள்ள விளக்குகளை காட்டிலும் பழைய விளக்குகள் கால அவகாசமும் மற்றும் மின்சாரமும் சரியானதாக இருக்கும். எப்படி நாம் வீட்டில் உபயோகபடுத்துகிறோமோ அதேபோன்று தான் தெருக்களிலும் அரசாங்கம் பயன்படுத்துகிறது.

பொதுவாகவே சாலை நடுவின் ஓரத்தில் விளக்குகள் இருப்பது சாதாரணமான ஒன்று தான். ஏனெனில் இருசக்கர வாகனங்கள், நான்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் எந்த நேரத்திலும் செல்வதால் அங்கு எப்பொழுதும் விளக்குகள் இருப்பது கட்டாயமாகும். ஆனால் தெருவிளக்குகள் அப்படி இருப்பதில்லை. அதும் இல்லாமல் சீக்கிரம் பழுதடைந்து விடுகிறது ( மின் கம்பங்கள் ) அல்லது அதிகமாக தேவைப்படுகிறது. இதனை சரிகட்டவே அந்த பகுதிகளில் உள்ள வார்டு உறுப்பினர்கள் தொடர்பு கொண்டால் கண்டிப்பாக தெருவிளக்கு வந்து விடும்.

தெருவிளக்கு வேண்டி கடிதம்


நீங்கள் எந்த வித மனுக்கள் அல்லது புகார்கள் எழுதினாலும் அதில் விடுநர், பெறுநர் மற்றும் பொருள் கட்டாயமாக இருக்க வேண்டும். அதற்கு பின்னர் தகுந்த காரணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் உங்கள் மனுக்கான கோரிக்கை ஏற்கப்படும்.

குடிநீர் வசதி வேண்டி நகராட்சி தலைவருக்கு விண்ணப்பம் எழுதுக

மின்விளக்கு வசதி வேண்டி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் ( இது நகராட்சி,பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளுக்கும் பொருந்தும் )

உங்கள் ஊர் கிராம ஊராட்சி என்றால் அங்கு வார்டு உறுப்பினர்கள் அல்லது கிராம பஞ்சாயத்து தலைவர்களை தொடர்பு கொண்டு மனு கொடுங்கள். நீங்கள் வசிக்கும் பகுதி நகராட்சி என்றால் நகராட்சி ஆணையர், நகராட்சி தலைவர், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் இவர்களை தொடர்பு கொள்ளவும். இதேபோன்று மாநகராட்சி மற்றும் பேரூராட்சிக்கும் பொருந்தும்.

விண்ணப்ப விளக்கம்

மதிப்பிற்குரிய ஐயா, நாங்கள் இந்த பகுதிகளில் சுமார் 20 க்கும் மேலான ஆண்டுகளாக வசிக்கிறோம். இங்கே எங்கள் தெருவில் கிட்டத்தட்ட 100 க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எங்கள் தெருவில் உள்ள தெரு விளக்குகள் எரியவில்லை மற்றும் எங்கள் தெருவிற்கு தெருவிளக்கு ஒன்று அல்லது மூன்று இருந்தால் உபயோகமாகும் என்று கருதுகிறோம். இதனால் எங்கள் மனுக்களை ஏற்று புதியதாக அல்லது மாற்றி வேறொரு தெருவிளக்கு அமைத்து தர வேண்டுகிறோம்.

குறிப்பு

மேலே குறிப்பிட்டவாறு தான் எழுத வேண்டும் என்று கட்டாயமில்லை. உங்கள் தெருவிற்கு என்ன வசதி வேண்டுமோ அதனை உண்மையாய் சரியானதாக எழுதுங்கள். மேலும் தெரு என்பதால் அதில் எத்தனை குடும்பங்கள், வார்டுகள் போன்றவை குறிப்பிட்டு இருந்தால் நல்லது.

தமிழ்நாடு நகராட்சி எண்ணிக்கை 2022