குடிநீர் வசதி வேண்டி நகராட்சி தலைவருக்கு விண்ணப்பம் எழுதுக

குடிநீர் வசதி வேண்டி நகராட்சி தலைவருக்கு விண்ணப்பம் எழுதுக Pdf ( குடிநீர் வசதி வேண்டி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் அல்லது ஊராட்சி மன்ற தலைவருக்கு கடிதம் ) - நீங்கள் தமிழ்நாட்டில் எந்த வித மாநகராட்சியிலும், பேரூராட்சியிலும், கிராம ஊராட்சியிலும் வசித்து இருந்தாலும் ஒரே மாதிரி கடிதம் எழுதி அனுப்பலாம். இதில் தனிப்பட்ட முறையிலும் சரி அல்லது ஒட்டுமொத்த பஞ்சாயத்துகள், தெருக்கள், ஊர்களின் தண்ணீர் பிரச்சனைகளுக்கு நாம் மனுக்களை கொடுக்கலாம். கிராம ஊராட்சிகள் என்றால் கிராம ஊராட்சி மன்ற தலைவரிடமும், நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி என்றால் அந்தந்த ஆணையர்களிடமும் மனுக்களை அளிக்கலாம்.

குடிநீர் வசதி வேண்டி நகராட்சி தலைவருக்கு விண்ணப்பம் எழுதுக


குடிநீர் வசதி வேண்டி விண்ணப்பம் Pdf

முதலில் அனுப்புனர் எழுத வேண்டும். யார் அனுப்புகிறாரோ அவரின் பெயர், முகவரி கட்டாயம் எழுத வேண்டும். பிறகு பெறுநர் என்கிற இடத்தில் நீங்கள் எந்த பகுதியில் வசிக்கிறீர்களோ அந்த பகுதியின் ஆணையர் அல்லது மன்ற தலைவர் அவர்கள் மற்றும் முகவரி எழுதுதல் அவசியம். மூன்றாவதாக பொருள் என்னும் இடத்தில் சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டும். அதாவது குடிநீர் வசதி எங்கள் ஊருக்கு அல்லது தெருக்கு இல்லை மற்றும் பழுதடைந்துள்ளது என குறிப்பிட வேண்டும் ( இது வெறும் மாதிரி தான் ).

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனு செய்வது எப்படி

இறுதியாக மூன்றாவதாக குறிப்பிட்ட பொருளை விளக்கத்துடன் குறிப்பிட்டு ஒவ்வொன்றாக எழுத வேண்டும். உங்கள் பகுதியில் குடிநீர் சம்மந்தப்பட்ட எந்த பிரச்சனையாகவும் இருந்தாலும் சரி அதனை தெளிவுபடுத்தி சரியாக எழுதுங்கள். ஒரு பக்கம் மிகாமல் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஒரு பத்தி எழுதினாலும் மிகவும் சரியாக எழுதினால் உங்கள் மனுக்கள் 99 சதவீதம் வெற்றி அடைய வாய்ப்பிருக்கிறது.

முதலமைச்சர் தனிப்பிரிவு மாதிரி மனு

குடிநீர் இணைப்பு வேண்டி விண்ணப்பம்

ஒட்டுமொத்த தெருக்களுக்கும் சரி அல்லது ஒரு குடும்பத்திற்கு அல்லது வீட்டிற்கு இணைப்பு வேண்டுமானாலும் விண்ணப்பங்கள் தரலாம். மனுதாரர் நேரில் ( அஞ்சல் ) சென்று மனுக்களை தர  மேற்கண்ட வழிமுறையை பின்பற்றலாம். ஒருவேளை நேரிலும் போஸ்ட் மூலமாகவும் மனுக்களை கொடுக்க முடியவில்லை என்றால் முதலமைச்சர் புகார் கடிதம் மூலம் உங்கள் விண்ணப்பங்களை கொடுக்கலாம்.

சாலை வசதி வேண்டி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்