ரேஷன் கடை மாற்றுவது எப்படி, ரேஷன் கடை எண் மாற்றம்

ரேஷன் கடை மாற்றுவது எப்படி, ரேஷன் கடை எண் மாற்றம் - தமிழ்நாட்டில் 34, 000 க்கும் மேலாக ரேஷன் கடைகள் இயங்குகின்றது. தமிழ்நாட்டில் உள்ள 216 வட்டங்களில் நியாய விலை கடைகள் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 500 முதல் 1000 ரேஷன் கடைகள் இருக்கின்றன. இதில் ஒவ்வொரு வட்டங்களுக்கு தலா 50 முதல் 100 ரேஷன் கடைகள் இருக்கின்றன. இதில் நாம் மாவட்டம், தாலுகா மற்றும் கிராமம் மாற்றி கொள்ளலாம்.

ரேஷன் கடை மாற்றுவது எப்படி


பெரும்பாலும் பக்கத்தில் உள்ள ரேஷன் கடைகள் நிறைய பேருக்கு வருவதில்லை. அதனால் மாற்றக்கூடிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை மூன்று வழிகளில் நாம் மாற்றி கொள்ள முடியும். எப்படி முகவரி மாற்றம் செய்கிறோமோ அதேபோல் தான் இதுவும் மாற்றி கொள்ளலாம்.

இதையும் பார்க்க: ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி தமிழ்நாடு

இ சேவை மையம் அல்லது நாமே மாற்றி கொள்ளும் முறை

1. Tnpds வெப்சைட் இல் முகவரி மாற்றத்தில் சென்று மாவட்டம், மண்டலம், தாலுகா இறுதியாக கிராமம் தேர்வு செய்ய வேண்டும்.

2. இதில் கிராமம் என்பதை சரியாக தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த கடை பக்கத்தில் உள்ளதோ அதனை சரியாக சூஸ் செய்யவும். இதில் கடை குறியீடோ அல்லது கடை எண்ணோ வராது.

3. பக்கத்தில் உள்ள ரேஷன் கடையை மாற்ற ஏதாவது ஒரு முகவரி ஆவணம் போதும். அதில் முகவரி மாற்றம் செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை ( பக்கத்தில் உள்ள கடைகளுக்கு மட்டும் ).

4. மாவட்டம், தாலுகா அல்லது மண்டலம் மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் கொடுக்க போகும் முகவரி ஆவணத்தில் கட்டாயம் முகவரி மாற்றம் செய்திருக்க வேண்டும்.

5. அப்ளை செய்த விண்ணப்பத்திற்கு குறிப்பு எண் ஒன்று இருக்கும். கடை எண் change ஆக வில்லை என்றால் உங்கள் வட்டாட்சியர் அலுவலகம் சென்று கேட்கலாம்.

இதையும் பார்க்க: குடும்ப அட்டை வகைகள்