காஞ்சிபுரம் மாநகராட்சி வார்டுகள், மண்டலம், ஆணையர், மேயர், வரைபடம் - 21 மாநகராட்சிகளில் இதுவும் ஒன்றாகும். சென்னைக்கு மிகவும் அருகாமையில் உள்ள காஞ்சிபுரம் தற்போது தான் மாநகராட்சியாக உருவாகியது. இதற்கு முன் நகராட்சியாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
1866 ஆம் வருடம் முதல் முறையாக நகராட்சி அந்தஸ்து பெற்றது. 1957 இல் முதல்நிலை, 1983 இல் தேர்வுநிலை மற்றும் 2008 சிறப்புநிலை நகராட்சியாகவும் இருந்தது. தமிழ்நாடு அரசு வெளிட்ட அரசாணைப்படி, 21 அக்டோபர் 2021 நாளில் புதிய மாநகராட்சியாக உருவாகியது. இதற்கென்று ஒரு மண்டலம் ( செங்கல்பட்டு ) மற்றும் 50 வார்டுகள் இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த பரப்பளவு 34.14 சதுர கிலோ மீட்டராகும்.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் செய்வது எப்படி
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்
தற்போது பணியில் இருப்பவர் பெயர் திருமதி. எம். மகாலட்சுமி மற்றும் அவருக்கு உதவி புரிய துணை மேயர் திரு. குமரகுருநாதன் அவர்கள் உள்ளார்.
ஆணையர்
தற்போதைய மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பில் வகிப்பவர் திரு. ஜி. கண்ணன் அவர்கள் தான்.
முகவரி
நகராட்சி அலுவலகம்,
அன்னை இந்திரா காந்தி சாலை,
காஞ்சிபுரம் 631502,
எண் - 044 27223593.
இதையும் படியுங்க: நகராட்சி ஆணையர் பணிகள்