நகராட்சி ஆணையர் பணிகள்

நகராட்சி ஆணையர் பணிகள் - நகராட்சி என்றால் ஒரு லட்சம் மக்கள் தொகையை கொண்டு இருக்கும் என நாம் ஏற்கனவே அறிந்ததே. பொதுவாக ஒரு சில பேரூராட்சிகள் நகராட்சிகள் ஆவது உண்டு. ஏனெனில் மக்கள்தொகை, வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வருவாய் அடிப்படையில் நகராட்சியாக மாறுவதுண்டு. தற்போதயை நிலவரப்படி 138 நகராட்சிகளும் அதில் 3843 வார்டுகளும் அடங்கியிருக்கிறது. எப்படி இதற்கு 138 நகரமன்ற தலைவர் அல்லது நகர மேயர் அல்லது நகராட்சி தலைவர் இருக்கிறாரோ அதேபோல் தான் இந்த நகராட்சி ஆணையரும் பணிபுரிவார். மற்ற நகரமன்ற தலைவர்கள் அரசியலை சார்ந்தவர்களாகவும் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகவும் உள்ளது. ஆனால் இவர்களுக்கு பதவிக்காலம் 58 அல்லது 60 ஆண்டுகளாகவும் இருக்கும்.

நகராட்சி ஆணையர் பணிகள்


இவரை ஆங்கிலத்தில் Municipal Commissioner என்று அழைப்பார்கள். இவர் சரியாக பணிபுரிந்தால் மாவட்ட ஆட்சியர் எனப்படும் கலெக்டர் ஆவதற்கும் வாய்ப்புண்டு. இவர் முதன்முதலில் Grade 2 என்ற பொசிஷன் இல் இருப்பார்.பிறகு இவர் படிப்படியாக முன்னேறி அடுத்த நிலைக்கு செல்வார். நகராட்சியின் முதன்மை நிர்வாக அலுவலராக இவர் இருப்பார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 2022

நகராட்சி ஆணையரின்அதிகாரங்கள் மற்றும் பணிகள்

1. நகராட்சி தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் மன்ற குழு இவர்களுக்கு மேலே இந்த ஆணையர் செயல்புரிவார். இவர்கள் பணி ஒழுங்காக செய்கிறார்களா பார்ப்பது இவரின் முக்கிய கடமைகளுள் ஒன்றாகும்.

2. பொது சுகாதாரம் நிறைவேற்றுதல்.

3. நகராட்சி பதிவேடுகளை தயாரித்தல்.

4. புதிய கோரிக்கைகளை செயல்படுத்துதல்.

5. பணமதிப்பிழப்பை சரிசெய்தல்.

6. கல்வி மேம்பாடு, சாலை, தெருவிளக்கு போன்றவைகளை பராமரித்தல்.

7. நகராட்சி கூட்டங்களை அவ்வப்போது கூட்டி தீர்மானங்களை செயல்படுத்துதல்.

8. குடிநீர் விநியோகம், மின்சார விநியோகம்.

9. தூய்மை திட்டங்கள்.

10. பாலங்கள் அமைத்தல்

சம்பளம்

முதன்முதலாக பணிபுரிவோருக்கு 42, 000 மேல் மாத சம்பளம் வழங்கப்படும். ஆனால் இவர்களுக்கு பணி புரியும் நேரம் என்று பார்த்தால் ஏதும் கிடையாது. அதாவது நகராட்சியில் எந்த ஒரு பிரச்சனைகளையும் தீர்மானங்களையும் எந்த வித நேரங்கள் எல்லாம் கிடைக்கிறதோ அப்போது நிறைவேற்றி முடிவெடுக்க வேண்டும்.

தமிழ்நாடு நகராட்சி எண்ணிக்கை 2022