-->
ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் செய்வது எப்படி

ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் செய்வது எப்படி

ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் செய்வது எப்படி - மூன்றடுக்கு ஊராட்சிகளில் மூன்றாதவாக இருக்கும் ஊராட்சி கிராமம் ஆகும். இதில் பஞ்சாயத்து தலைவரே முதன்மையானவர் ஆவர். இவரை பணி நீக்கம் செய்ய முடியுமா என்றால் நிச்சயம் முடியும். என்னதான் இவர் தேர்தல் நின்று முறையாக வெற்றி பெற்றிருந்தாலும் சில பல காரணங்களால் இவர் நீக்கப்படுகிறார். தற்போது ஊராட்சி மன்ற தலைவர் சம்பளம் 2022 என்று பார்த்தால் 1000 ரூபாயில் இருந்து 1500 ஆக உள்ளது.

ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் செய்வது எப்படி


காரணங்கள்

1. அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது.

2. செயல் திட்டங்களை மாற்றுவது.

3. வீடுகள் மற்றும் வேறு ஏதாவது திட்டங்கள் இலவசமாக மக்களுக்கு வருவதை தாமே அபகரித்து கொள்வது.

4. கிராம கணக்கு வரவு செலவு மாற்றி எழுதுதல்.

5. கிராம நிதியை தாமே எடுத்துக்கொள்வது.

6. கட்டாயக்கடமைகளை செய்யாமல் இருப்பது.

மேற்கண்ட காரணங்கள் காணப்பட்டால் நிச்சயம் பதவி நீக்கம் செய்வதற்கு 100 சதவீதம் வாய்ப்பு அதிகமாகும். இதனை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 இன் கீழ் இவரை பதவி நீக்கம் செய்யலாம்.

கிராம கணக்கு எண்

பஞ்சாயத்து தலைவர் பதவி நீக்கம்

1. இவரை பதவி நீக்கம் செய்வதற்கு வார்டு உறுப்பினர்கள் நான்கு அல்லது ஐந்து பேர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விட்டாலே அவர் தாசில்தார் அவர்களை பரிந்துரை செய்து விசாரணை செய்ய சொல்வார். 

2. ஆனால் இதற்கு முன்னர் மாவட்ட கலெக்டர் அவர்கள் ஊராட்சி தலைவருக்கு இதற்கான விளக்கத்தை தரும்படி கேட்டு 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறுவார். 

3. தலைவர் அவர்கள் அந்த 30 நாட்களுக்குள் பதிலளிக்கவில்லை என்றால் தான் அடுத்த கட்டமாக வட்டாட்சியர் அவர்கள் விசாரணை மேற்கொள்வார்.

4. தாசில்தாரும் கூட்டங்களை கூட்டி அதற்கான விளக்கத்தை கேட்டு தெரிந்து கொள்வார்.

வருவாய் ஆய்வாளர் பணிகள் மற்றும் கடமைகள்

5. இதில் வாக்கு வாதங்கள் கண்டிப்பாக இருக்கக்கூடாது. இந்த தற்காலிக கூட்டத்தின் தலைவர் தாசில்தாரே ஆவார். 

6. அவர் கூட்டங்கள் கூடும்போது வர வில்லை என்றால் மற்றொரு மாதத்திற்குள் மறுபடியும் கூட்டங்களை கூடி விசாரணை மேற்கொள்வார். எப்படி பார்த்தாலும் தாசில்தார் மட்டுமே இதற்கு விசாரணை மேற்கொள்வார்.

7. விசாரணை முடிவில் குற்றம் சுமத்தப்பட்டால் தலைவர் அவர்களை மாவட்ட கலெக்டர் அவர்கள் பதவி நீக்கம் செய்வார். தலைவர் அவர்கள் மூன்று ஆண்டு வரையும் அந்த பதவி வகிக்க முடியாது.

குறிப்பு

மேற்குறிப்பிட்ட அனைத்து விதிகளும் ஊராட்சி சட்டம் 1994 இல் பிரிவு 205 இல் உட்பிரிவு ஒன்றில் இருந்து பதின்மூன்று வரையும் உள்ள சட்டங்களாகும்.

நகராட்சி ஆணையர் பணிகள்