புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி

புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி - பயனாளர்கள் குடும்ப அட்டை வேறு ஸ்மார்ட் கார்டு வேறு என்று நினைத்து கொள்கிறார்கள். மாறாக அப்படி இல்லை குடும்ப அட்டையும் ஸ்மார்ட் கார்டும் ஒன்றே தான். முன்பு எல்லாம் ஒரு நோட் புக் மாதிரி குடும்ப அட்டை இருக்கும். அதில் முதல் பக்க அட்டையில் குடும்ப தலைவர் புகைப்படம், குடும்ப அட்டை எண், சர்க்கரை அட்டையா அல்லது அரிசி அட்டையா, கடை எண் என்று இத்தனை விவரங்கள் அடங்கி இருக்கும். பிறகு நாம் வாங்கும் பொருட்கள் ஒவ்வொன்றாக அதில் குறிக்கப்படும்.

புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி


ஆனால் இப்பொது குடும்ப அட்டை மிகவும் எளிமையாக கை அடக்கம் கொண்டவையாக இருக்கிறது. இதிலும் பழைய ரேஷன் கார்டு போன்றே முதல் பக்கத்தில் இருப்பவை போல் இருக்கும். ஆனால் பின் பக்கத்தில் எதுமே குறிக்க முடியாது. நீங்கள் ரெஜிஸ்டர் செய்த தொலைபேசி எண்ணிற்கு ஒரு செய்தியாக எப்போது பொருட்களை வாங்குகிறீர்களோ அப்போது உங்கள் தொலைபேசிக்கு வரும்.

புதிய குடும்ப அட்டை பெற நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், முகவரி, சரியான தொலைபேசி எண்கள் இவை அனைத்தும் Tnpds கொடுக்க வேண்டும். மேலும் பூர்த்தி செய்த விவரங்களுக்கு கீழ் அட்டை தேர்வில் பண்டகமில்லா அட்டை, அரிசி அட்டை, சர்க்கரை அட்டை மற்றும் இதர அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை சூஸ் செய்து கொள்ளுங்கள்.

அட்டை தேர்வை முடித்த உடன் குடியிருப்புச் சான்று தேர்ந்தெடுக்கவும். அதில் ஆதார் அட்டை, மின்சார கட்டணம், வங்கி கணக்கு புக், வாடகை ஒப்பந்தம், வாக்காளர் அட்டை, கொத்தடிமை விடுவிப்புச் சான்று இவற்றில் உங்களுக்கு எது சரியாக இருக்கிறதோ அதனை அப்லோட் செய்து கொள்ளவும்.

இறுதிபடியாக எரிவாயு போன்ற விவரங்களை என்டர் செய்ய வேண்டும். இவை அனைத்தும் செய்த முடித்த பின்னர் உறுதிப்படுத்தினால் உங்களுக்கு குறிப்பு எண் ஒன்று வழங்கப்படும். அப்படி வழங்கப்பட்ட குறிப்பு எண்ணை கொண்டு உங்கள் ஸ்மார்ட் நிலையை அறிந்து கொள்ளலாம்.

குடும்ப அட்டை பெயர் நீக்கல் சான்று

குடும்ப அட்டை முகவரி மாற்றம் விண்ணப்பம்

புதிய ரேஷன் கார்டு வாங்குவது எப்படி