பு.ஏ என்றால் என்ன - பழைய பட்டாக்களில், பத்திரங்களில் மற்றும் பழைய நில பதிவேடுகளில் இந்த வார்த்தை அதாவது பு ஏ என்பதனை பார்த்திருப்போம். இதுவரை பார்க்கவில்லை எனில் பழைய நில பதிவேடுகளை சற்று புரட்டி பாருங்கள்.
ஏனெனில் தற்போது நாம் ஒரு நிலம் அல்லது மனை வாங்க நேர்ந்தால் அதற்கு நிச்சயமாக பழைய ரெகார்ட்ஸ்களை பார்த்தே ஆக வேண்டும். அதில் பல இடங்களில் பு ஏ மற்றும் பழைய வழக்கு சொற்கள் காணப்படும். அதனை தவிர்த்து விடாமல் அது என்னவென்று தெரிந்து கொள்வது அவசியமே.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: ஒருங்கிணைந்த சான்றிதழ் பெறுவது எப்படி
அப்படி தெரியவில்லை எனில் இந்த பதிவு உங்களுக்கு தான் தேவைப்படும். ஏனெனில் லேண்ட் வாங்கும்போது முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்று தான் ரெகார்ட்ஸ். இந்த ரெகார்ட்ஸ் சரியில்லை எனில் பிற்காலத்தில் நமக்கு தான் ஆபத்தே.
பு ஏ என்றால் புல எண் ஆகும். அதாவது சர்வே எண் ஆகும். ஒரு நிலத்திற்கு உண்டான எண்ணை இது குறிக்கின்றது. தற்போது உள்ள பட்டாக்களில் பெரும்பாலும் இது இல்லாமல் சர்வே எண் என கொடுக்கப்பட்டிருக்கும்.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: விடுதலை பத்திர பதிவு கட்டணம்