விடுதலை பத்திர பதிவு கட்டணம் ( release deed stamp duty in tamilnadu ) - இதனை ஆங்கிலத்தில் release deed என்றும் அழைக்கலாம். அதாவது விட்டு கொடுக்கும் சொத்து எனலாம். அது பணம் பெற்று கொண்டாலும் அல்லது பணம் பெறாமல் அன்பால் கொடுத்தாலும் சரி இதனை விட்டு கொடுக்கும் சொத்து என்று சொல்வார்கள்.
இதில் பூர்வீக சொத்தின் அடிப்படையில் தான் பெரும்பாலும் அதிக பரிவர்த்தனை நடக்கின்றது. ஆனாலும் கூட்டுரிமை சொத்திலும் இது நடக்கின்றதே உண்மை.
எதுவாயினும் குடும்ப நபர்களுக்கு இடையில் ஒரு கட்டணம் குடும்ப நபர் அல்லாத நபர்களுக்கு இடையில் வேறு ஒரு கட்டணமும் பதிவுத்துறையானது வசூல் செய்கின்றது.
1. குடும்ப சொந்தகளுக்கு இடையில் பதிவு கட்டணம் 1 சதவீதமும் முத்திரைத்தாள் கட்டணம் 1 சதவீதமும் பெறப்படுகின்றது. அதாவது எவ்வளவு சொத்து இருந்தாலும் முத்திரை தீர்வை ரூபாய் 40, 000 மும் பதிவுக்கட்டணம் ரூபாய் 10, 000 க்கு மேல் வசூல் செய்யப்படாது. இதற்கு முன்னர் மொத்தமாக ரூபாய் 30, 000 இருந்தது குறிப்பிடத்தக்கது.
2. குடும்ப நபர் இல்லாத நபர்களுக்கு பதிவு கட்டணம் 2 சதவீதமும் முத்திரை தீர்வை 7 சதவீதமும் பெறப்படுகின்றது.
இதையும் படிக்க: ஆவண எண் என்றால் என்ன