பூர்வீக சொத்து விற்பனை 2023 - பூர்வீக சொத்து பிரச்சனை தீர ஏராளமான வழிகளை இங்கே காணலாம். பூர்வீக சொத்துக்கள் என்றாலே பூர்வீகம் என்று பொருள். அதாவது பழைய அல்லது பாரம்பரிய சொத்துக்களை பராமரிப்பது ஆகும். மூன்றாவது தலைமுறை மக்கள் அனுபவிக்கும் சொத்துக்களை பூர்வீகம் என்றும் கூறலாம். உதாரணமாக தாத்தா தான் சுயமாக சம்பாதித்து சேர்த்து வைத்த சொத்து வைத்திருக்கிறார் அதனை அவர் மகன் அனுபவிக்கிறார் பிறகு அவருடைய பேரன் அல்லது பேத்தி அனுபவிக்கிறார்கள். இந்த பேரன் மற்றும் பேத்திகள் அனுபவிக்கும் சொத்துக்களை தான் பரம்பரை சொத்து என்று கூறுவர். அதனை தான் சட்டம் 2005 மற்றும் 2021 சொல்கிறது.
பூர்வீக சொத்து பிரச்சனை
ஒருவருடைய தாத்தா சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் ஐந்து சென்ட் காலி மனை வாங்கினார். பத்திரப்பதிவும் செய்திருக்கிறார்கள். இப்போது அந்த நிலம் என்னுடைய பெயருக்கு மாற்ற முடியுமா ?
அந்த காலி மனையில் யாருமே குடியேறக்ககூடாது. அப்படி யாராவது குடியேறி இருந்தால் அனுபவ பாத்தியம் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் நபர்கள் என்று அரசாங்கம் அந்த மனையை அவர்களிடமே கொடுத்து விடும். ஏனென்றால் அந்த நாற்பது வருடங்கள் மனையின் சொந்தக்காரர் வீட்டு வரி, சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி கட்டிருக்க மாட்டார். மாறாக குடியேறி வந்தவர் இந்த வரிகள் எல்லாம் பன்னிரெண்டு வருடங்களுக்கு மேல் கட்டிருந்தாலே போதுமானது.
இதையும் படிக்க: Udr க்கு முந்தைய ஆவணங்கள்
ஒருவேளை யாரும் அபகரிக்கவில்லை அல்லது அரசு அ பதிவேட்டில் உங்கள் நிலம் மற்றும் அதற்கு சர்வே எண்களும் தரப்படவில்லை என்றாலும் அரசு அதனை புறம்போக்கு நிலமே என்று கருதும். புறம்போக்கு நிலம் அரசாங்கம் நிலம் தான் என்று மக்கள் புரிந்து கொள்தல் அவசியம். அப்படி உங்கள் நிலம் புறம்போக்கு நிலம் என்றால் அதற்கு உரிமை கோர முடியாது.
இதையும் காண்க: வில்லங்கம் பார்ப்பது எப்படி
பூர்வீக சொத்துக்கள் விற்பனை செய்யும் வேண்டுமென்றால் அந்த சொத்துக்கள் எல்லாம் சம்மந்தப்பட்ட ஆள் மீது இருக்க வேண்டும். இது மொத்தமாக மூன்று வழிகளில் வரும். ஒன்று அந்த சொத்தின் ஓனர் பாகப்பிரிவினை செய்திருக்கலாம், தானம் அல்லது வாரிசு அடிப்படையில் வந்துருக்கும். அப்போது அந்த சொத்துக்களை விற்று கொள்ளலாம்.
பூர்வீக சொத்தை பிரிக்கும் முறை