போலி பத்திரம் ரத்து செய்வது எப்படி

போலி பத்திரம் ரத்து செய்வது எப்படி அல்லது போலி பத்திரம் கண்டுபிடிப்பது எப்படி ) - போலியான பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் ஏராளமாக தற்போது உள்ளன. அதை தவிர்க்க அரசாங்கம் பல விஷயங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதனை எப்படி சமாளிப்பது என்று பார்ப்போம்.

அப்டேட் மார்ச் 17, 2022

ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு முறை தமிழ்நாட்டிற்கு வர தாமதமாகும் என பத்திரப்பதிவு துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் மார்ச் 17 அன்று கூறினார். அது மட்டுமல்லாமல் போலியான பத்திரம் ரத்து செய்வதற்கும் அதனை மேல் முறையீடு செய்வதற்கும் தமிழக அரசு 77ஏ மற்றும் 77பி சட்ட திருத்தங்களை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. மத்திய அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் எனவும் அதில் கூறியுள்ளார். இதன்படி மாவட்ட பதிவாளர்களுக்கு ஆவணங்களை ரத்து செய்யும் முறையும் இருக்கிறது எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தார்கள். தவறான அல்லது மோசடியில் ஈடுபட்ட பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர்கள் மீது ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை என அதில் சொல்லி இருந்தார்கள்.

போலி பத்திரம் ரத்து செய்வது எப்படி


நீங்கள் ஏற்கனவே ஒரு இடத்தினை வாங்கி உள்ளீர்கள் எனில் அதற்கு மூல பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவைகள் உங்கள் பெயருக்கு இருக்க வேண்டும். அந்த இடத்திற்கான போலியான ஆவணங்கள் உங்களுக்கு தெரிய வந்தால் நீங்கள் உடனடியாக மாவட்ட பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று மனு கொடுங்கள். அதற்கு உங்களுடைய ஆவணங்கள், வீட்டு வரி மற்றும் சொத்து வரி ஆகியவைகள் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.

நகல் எடுத்தல் என்றால் என்ன

எப்படி போலி ஆவணங்கள் வருகின்றது என்றால் நில உரிமையாளர் வெளியூரில் இருப்பார்கள். அவர்கள் வராத சூழ்நிலையில் போலியான ஆவணங்கள் தயாரிக்க வாய்ப்புள்ளது. பிறகு பவர் கொடுக்காமலே பவர் ஏஜென்ட்கள் அதன் போலி ஆவணங்கள் தயாரிக்க வாய்ப்புள்ளது.

எதிரிடை ஆவணம் உள்ள நபரையும் உங்களையும் அழைத்து விசாரிப்பார்கள். அதில் தெரிந்து விடும் யார் போலியான ஆவணங்கள் தயாரித்தது என்று. உங்கள் மூல பத்திரம் மற்றும் பட்டா சரியாய் இருக்கும் பட்சத்தில் அந்த போலியான ஆவணங்களை ரத்து செய்வார்கள். இதற்கான மனு நீங்கள் கைப்பட எழுதுதல் வேண்டும். இல்லையென்றால் பத்திரம் எழுத்தாளரிடம் சென்று உங்கள் பிரச்சனைகளை சொன்னால் அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் எழுதுவார்கள்.

பத்திரத்தில் பிழை திருத்தம் பணிகள் உள்ள நிலையில் நீங்கள் எங்கு பதிவு செய்தீர்களோ அங்கு செல்ல வேண்டும். மாவட்ட பத்திர பதிவு துறைக்கு செல்ல கூடாது. 

தனியார் நில ஆக்கிரமிப்பு சட்டம் 

Fb பேஜ்