நகல் எடுத்தல் என்றால் என்ன

நகல் எடுத்தல் என்றால் என்ன - சொத்தின் நகல் என்பது ஆன்லைனில் கிடைக்கும் நகல் ஆகும். ஒருவரின் நகல் காணாமல் போனாலும் அல்லது ஏற்கனவே எடுத்துள்ள நகலின் பக்கங்கள் சரியாக தெரியாத போதும் நகல் எடுக்க ஆன்லைனில் தேடுவார்கள். நாம் இதனை மூன்று வழிகளில் பெறலாம்.

நகல் எடுத்தல் என்றால் என்ன


1. சார் பதிவாளர் அலுவலகம் 

2. நீங்களே ஆன்லைனில் செய்யலாம் 

3. இ சேவை மையம் 

இந்த மூன்று வழிகளில் நீங்கள் உங்கள் சொத்து பத்திரத்தின் நகலை பெறலாம். இதில் இரண்டாவது options யை தேர்வு செய்தாலும் ஒரு சில நேரத்தில் பத்திரத்தின் நகலை எடுக்க முடிவதில்லை. இதற்காக கட்டணம் வசூலிக்கப்படும்.

படி 1

Tnreginet வெப்சைட் சென்று உள்நுழைவு பட்டனை தேர்வு செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே ரெஜிஸ்டர் செய்து இருக்க வேண்டும். ரெஜிஸ்டர் செய்யவில்லை எனில் ரெஜிஸ்டர் செய்து பிறகு லாகின் செய்யுங்கள்.

Tnreginet

படி 2

லாகின் செய்த உடன் மின்னணு சேவைகள் navigation சென்று சான்றளிக்கப்பட்ட நகலை சூஸ் செய்து தேடல் மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல் என்று இருக்கும்.

படி 3

படி இரண்டை முடித்த உடன் ஆவணம் விவரம் தேடுதலில் மூன்று options தோன்றும். அவைகள் சொத்து சம்பந்தப்பட்ட ஆவணம், சங்க பதிவு மற்றும் கூட்டு நிறுவன பதிவு 

படி 4

இதில் சொத்து ஆவணம் சூஸ் செய்து ஆவண எண், சார் பதிவாளர் அலுவலகம், ஆண்டு, புத்தக எண் இவை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும்.

படி 5

பிறகு பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றையும் கட்டம் இரண்டில் பூர்த்தி செய்ய வேண்டும்.

படி 6

இதில் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணங்கள் உங்கள் சொத்தின் ஆண்டு பொறுத்தே வேறுபடும்.

1. மனு கட்டணம் 

2. தேடுதல் கட்டணம் 

3. நகல் கட்டணம் 

4. கணினி கட்டணம் 

5. முத்திரை தீர்வை கட்டணம் 

இந்த வகையான கட்டணங்கள் எல்லாம் நீங்கள் கட்ட வேண்டி இருக்கும். இதனை எல்லாம் முடித்த பிறகு உங்கள் தொலைபேசி எண்ணுக்கு message வரும். அப்போது tnreginet இணையதளம் லாகின் செய்து உங்கள் ஆவணங்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

பூர்வீக சொத்தை பிரிக்கும் முறை

ரெவின்யூ ஸ்டாம்ப்