பெயரை வைத்து பட்டா சிட்டா எப்படி பார்ப்பது

பெயரை வைத்து பட்டா சிட்டா எப்படி பார்ப்பது ( பட்டா எண் அறிவது எப்படி ) - நம்மிடம் பட்டா மற்றும் சிட்டா நகல் இல்லாத பட்சத்தில் எப்படி பட்டா சிட்டா அடங்கல் பார்ப்பது என்கிற கேள்வி நம் மனதில் ஆழமாக எழும். அதை எவ்வாறு காண்பது என்று கீழே பார்ப்போம். பொதுவாக நாம் பட்டாவை பார்ப்பதற்கு பட்டா எண், லேண்ட் சர்வே நம்பர் மற்றும் சப் டிவிசன் நம்பர் இருந்தால் போதுமானது.

தமிழ்நாடு பட்டா பாஸ் புத்தக சட்டம் 1983 Pdf

இப்போது அதற்கும் மேலாக எளிதான வழிகள் கிடைத்துள்ளது. அதாவது நம்முடைய பெயர் வைத்தே பட்டா நகலை காண முடியும். நாம் ஒரிஜினல் வெப்சைட் இல் சென்றால் மாவட்டம், வட்டம் மற்றும் அதனை சார்ந்த கிராமம் விவரங்களை சரியாக செலக்ட் செய்ய வேண்டும். பிறகு மூன்று விதமான options லாம் அதில் தோன்றும். அவைகளை கீழே காண்போம்.

அனாதீனம் நிலம் என்றால் என்ன

1. பட்டா எண் 

2. புல எண் 

3. பெயர்

இதில் நாம் பட்டா எண் மற்றும் புல எண் இவைகளை ஏற்கனவே உபயோகிப்படுத்திருப்போம். ஆனால் முழுமையாக பெயர் என்ற options யை தேர்வு செய்திருக்க மாட்டோம். இதனை செலக்ட் செய்தால் மூன்று எழுத்து மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக உங்கள் பெயர் ஐந்து தமிழ் இலக்க எண் இருந்தால் முதலில் வரும் மூன்று இலக்க எழுத்துக்களை மட்டுமே அந்த கட்டத்தில் உபயோகப்படுத்த வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பூர்வீக சொத்தை உயில் எழுத முடியுமா

இப்பொது சில மாவட்டங்கள் மட்டுமே புதிதாக உருவாக்கப்பட்டதனால் உங்கள் மாவட்டங்களின் கிராம பெயர்கள் இடம் பெற்று இருக்காது. அதனால் உங்கள் மாவட்டத்தின் பெயரும் சேர்ந்து கிராமம் மற்றும் டவுன் என்கிற ஆப்ஷன்ஸ் தோன்றும். அதில் நீங்கள் கிராமத்தில் வருபவரா இருந்தால் கிராமம் என்றும் நகரத்தில் இருக்கிறீர்கள் என்றால் டவுன் என்றும் செலெக்ட் செய்ய வேண்டும்.

பெயரை வைத்து பட்டா சிட்டா எப்படி பார்ப்பது


இதில் கொடுத்துள்ள பெயர் option யை தேர்வு செய்து உங்கள் பட்டா மற்றும் சிட்டாவை பார்வையிடுங்கள். ஒரே ஊரில் ஒரே பெயரில் நிறைய பேர் இருக்க வாய்ப்புள்ளது. அப்படி உங்களுக்கு அதனை யூஸ் செய்ய பிடிக்க வில்லையென்றால் Option ஏ மற்றும் Option பி தேர்வு செய்து பாருங்கள். ஒரே ஊரில் ஒரே பெயரில் ஏகப்பட்ட பெயர்கள் இருந்தால் ஒவ்வொன்றாக பார்க்கவும். இதேபோல் உங்கள் ஊரில் மற்ற லேண்ட் ஓனர் பெயர்களையும் எளிதில் கண்டறியலாம்.

மேலே உள்ள புகைப்படத்தில் ஒரே பெயரில் ஏகப்பட்ட லேண்ட் ஓனர் பெயர்கள் இடம் பெற்று இருக்கின்றனர். அப்படி எவ்வாறு உங்கள் லேண்ட்யை சரியாக தேர்வு செய்வதென்றால் இடது பக்கத்தில் பட்டா எண் இருக்கும். உங்களுக்கு ஞாபகம் இருந்தால் அந்த பட்டா எண்ணை தேர்வு செய்யலாம். அப்படி மறந்து விட்டிர்கள் என்றாலும் ஒவ்வொரு பட்டா எண்ணை செலக்ட் செய்து பார்க்கவும். இப்படி செய்தால் தான் உங்கள் பட்டா சிட்டா மற்றும் இதர விவரங்களை காண முடியும். அதாவது வாடிக்கையாளர்கள் பட்டா எண் , சர்வே எண் இவற்றை மறந்து போனால் தான் இந்த முறையை பின்பற்ற வேண்டும்.

இதையும் படிக்க: https tnreginet gov in portal