தமிழ்நாடு பட்டா பாஸ் புத்தக சட்டம் 1983 Pdf - இந்த 22 ம் நூற்றாண்டில் பட்டா எனும் நில உரிமை ஆவணத்தை வெறும் ஒரு நிமிடத்தில் செலவில்லாமல் உங்கள் தொலைபேசிலே எடுத்து கொள்ள முடியும். அதும் இல்லாமல் பட்டா எண், சர்வே எண், பெயர் இவற்றில் ஏதாவது ஒன்று தெரிந்தாலே நில உரிமையாளரின் பட்டாக்களை எடுக்கலாம். ஆனால் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னர் பழைய ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் போல் தான் இந்த பாஸ் புத்தகம் இருக்கும். அதில் கடன், கிரையம், திசை, முகவரி, பெயர்கள், நிலத்தின் அளவு, நிலத்தின் தன்மை போன்றவைகளும் இருக்கும். அதாவது பட்டாவும் பாஸ் புத்தகமும் ஒன்று தான் என புரிந்து கொள்தல் அவசியம்.
இந்த பாஸ் புத்தகம் சட்டம் 1983 இல் தொடங்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் அது 1986 அன்று தான் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு சட்டமும் பட்டா மாறுதல் மற்றும் திருத்தம் பற்றி தான் இயற்றப்பட்டது. அதாவது பட்டா மாறுதல் செய்யும்போது இரண்டு தரப்பினரையும் விசாரித்து பின்னர் தான் DRO மற்றும் RTO விற்கு உரிமை உள்ளது எனவும் சட்டம் சொல்கிறது. அப்படி எந்த வித இல்லாமல் பதிவு செய்யப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வருவாய் கோட்டாட்சியருக்கு பட்டா பாஸ் புத்தக சட்டம் 1983 பிரிவு 12 இந்த படி அவருக்கு உரிமை உள்ளது.