அனாதீனம் நிலம் என்றால் என்ன - அனாதினம் நிலம் என்பது அரசாங்கம் தன் கீழ் கையகப்படுத்தி இருக்கும் உரிமை கோரப்படாத நிலம் எனலாம். அதாவது 1960 க்கு முன்னர் மக்கள் 30 ஏக்கருக்கு மேல் நிலங்களை ஏகப்பட்ட பேர் வைத்திருந்தனர். ஆனால் நில உச்ச வரம்பு சட்டம் 1961 இன் அடிப்படையில் முப்பது ஏக்கருக்கு மேல் யாராவது நிலங்களை வைத்திருந்தால் அரசாங்கம் அதனை எடுத்து கொண்டனர். இதனை தான் அனாதீனம் நிலம் என்றழைப்பர்.
இப்போது ஒருவர் ஐந்து அல்லது அதற்கு முன்னர் அனாதினம் நிலம் என்று வாங்கி விட்டார். இப்போது அந்த நிலத்திற்கு பட்டா கிடைக்குமா ?
பதிவுத்துறையில் உங்கள் நிலம் பதிவு செய்யப்பட்டுருந்தாலும் வருவாய்துறையினர்கள் அதனை ஏற்க மறுப்பார்கள். கண்டிப்பாக அந்த இடங்களுக்கு பட்டா கிடைக்காது என்பதே உண்மை. அதுமட்டுமில்லாமல் அந்த இடங்கள் CMDA மற்றும் DTCP அங்கீகாரம் இல்லாத மனைகளாக இருக்கும். மேலும் அந்த கால அவகாசங்கள் 29.06. 1987 இல் தொடங்கி 29.08.1997 இலெ முடிந்தது. அதனால் அந்த இடங்களை தனிப்பட்ட நபர் உரிமை கொண்டாட முடியாது.
நான் தெரியாமல் அந்த இடத்தினை வாங்கி விட்டேன் இப்போது என்ன செய்வது ?
முதலில் தவறுகள் என்று பார்த்தால் உங்களுடையது தான். ஏனென்றால் முழுவதுமாக விசாரித்து பத்திரத்தை படித்து அல்லது வக்கீலை நாடி இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் எதும் வந்து இருக்காது. பதிவுத்துறையில் அனாதினம் நிலம் மட்டுமல்லாமல் நீர்நிலை, மேய்க்கால், மயானம், மந்தைவெளி போன்ற இடங்களையும் பதிவு செய்து விடுகின்றனர். ஆனால் இதற்கு ஒருபோதும் பட்டா வாங்க மாட்டார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது அந்த இடத்தினை நான் விற்க முடியுமா ?
கண்டிப்பாக விற்க முடியாது. பதிவுத்துறையில் என்னதான் பதிவு செய்தாலும் இது போன்ற செயல்கள் மோசடியாகவே கருதப்படும். ஒருவேளை உங்களிடம் பழைய பட்டா இருந்தாலும் அதாவது Udr காலத்தில் கொடுப்பட்ட பட்டா இருந்தால் கூட அரசு அ பதிவேட்டில் அனாதினம் நிலம் என்று குறிப்பிட்டுருந்தால் அதனை விற்பனை செய்ய கூடாது. மேலும் அரசாங்கம் இந்த நிலங்களை பொது பணிக்கும், நிலமற்ற ஏழைகளுக்கும் கொடுக்கும் நோக்கத்தில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.