பட்டாவில் தீர்வை என்றால் என்ன

பட்டாவில் தீர்வை என்றால் என்ன - பொதுவாக தீர்வை என்பது வரியாக செலுத்த வேண்டும். பட்டா மற்றும் சிட்டா இவற்றின் தீர்வைகளை நாம் நில உரிமை சான்றிதழ் கொண்டு பார்க்க முடியும். அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று பார்ப்போம்.

பட்டாவில் தீர்வை என்றால் என்ன


நாம் தீர்வை கணக்கை சிட்டா பரப்பு பக்கத்தில் காணலாம். தீர்வை ஹெக்டேர் மற்றும் ஏக்கர் கணக்கில் தான் அந்த நில உரிமை சான்றிதழில் காட்டும். மேலும் தீர்வையானது நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களுக்கும் வரி கட்ட நேரிடும். நஞ்சை நிலத்தை விட புஞ்சை நிலத்தில் வரி குறைவு. ஆனால் இரண்டுக்குமே வரி என்பது கட்டாயம் தான்.


2010 இன் ரிப்போர்ட் படி, புஞ்சை நிலத்திற்கு ஹெக்டேர் ரூபாய் 5 ரூபாய்க்கும் மற்றும் ஒரு ஏக்கர் 2 ரூபாய்க்கும் வரி வசூல் செய்ய படுகிறது. நஞ்சை நிலத்திற்கு ஹெக்டேர் 12 ரூபாய்க்கும் மற்றும் ஒரு ஏக்கர் 5 ரூபாய்க்கும் வரிகள் வசூல் செய்யப்படுகிறது.

இதைத்தவிர பட்டாவிற்கு நில உரிமை வசூலாக ரூபாய் 1 பெறப்படுகிறது. ஒருவேளை நிலங்கள் வறட்சியாக இருந்தால் அந்த வருடம் எந்த வித தீர்வையும் அரசு கட்ட சொல்லாது. மாறாக அதனை தள்ளுபடி செய்யும். இந்த நில வரியானது ஜனவரி முதல் ஏப்ரல் மாதங்கள் வரை வசூல் செய்யப்படுகிறது.

சிட்டா என்றால் என்ன 

பிராமிசரி நோட்டு மாதிரி 

செட்டில்மெண்ட் பத்திரம்

Fb பேஜ்