பட்டா ஒருவர் பெயரிலும் பத்திரம்

பட்டா ஒருவர் பெயரிலும் பத்திரம் - பட்டாவும் பத்திரமும் ஒரு வகையான முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. அதை எப்படி கையாள்வது என்று ஒவ்வொன்றாக பார்ப்போம். என்னிடம் பட்டா உள்ளது ஆனால் பத்திரம் என் பெயரில் இல்லை என்று சொல்கிறார் என்று வைத்து கொள்வோம். அவர் அந்த நிலத்தில் எத்தனை வருடங்கள் வசிக்கிறார் என்பதை பொறுத்து அந்த நிலம் அவருக்கு சொந்தமாகும்.

அரசு கொடுக்கும் புறம்போக்கு நிலங்களுக்கு அன்றய காலத்தில் பத்திரம் இல்லை. நம்மிடம் அரசு கொடுத்த பட்டா ஆவணம் உள்ளது என்றால் பிரச்சனை இல்லை.

பட்டா ஒருவர் பெயரிலும் பத்திரம்


இப்போது ஒருவர் இடம் பத்திரம் உள்ளது ஆனால் பட்டா வேறு ஒருவர் பெயரில் உள்ளது என்றால் யார் இடம் சுவாதீனம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். சுவாதீனம் என்றால் யார் அனுபவிப்பது என்று அர்த்தம். பத்திரம் இருக்கும் நபர் பத்திரத்தை பதிவு செய்த உடன் பட்டா பெயர் மற்றம் செய்து இருக்க வேண்டும். மாற்றாமல் இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கும்.

ஒருவர் வீட்டில் வசிக்கிறார் என்றால் பட்டா மற்றும் உள்ளது பத்திரம் வேறு ஒருவர் பெயரில் உள்ளது என்றால் நீங்கள் அந்த இடத்தில் வாசிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு நன்மை தான் . ஏனென்றால் நீங்கள் பட்டா மற்றும் அனுபவ பாத்தியதை வைத்து Dro இடம் மனு கொடுக்கலாம்.

இது போன்ற பல பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கும். நீங்கள் முழு ஆவணங்களை சரியாக வைத்து இருந்தால் நாம் எந்த ஒரு பிரச்சனையும் தீர்த்து விடலாம்.

பட்டா இல்லாத நிலம்

பழைய பத்திரம்

பட்டா ரத்து செய்வது எப்படி

Fb பேஜ்