பட்டா மாறுதல் புகார் மனு தகவல் அறியும் உரிமை

பட்டா மாறுதல் புகார் மனு தகவல் அறியும் உரிமை - தற்போது பத்திரப்பதிவு பட்டாவை காட்டிலும் மிகவும் எளிமையாக முடிந்து விடுகின்றது. ஆனால் பட்டா மாறுதல் என்பது தாமதமாகிறது. இ சேவை மையம் மூலமாக பட்டா மாறுதல்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் மற்ற விண்ணப்பங்களும் நிலுவையில் உள்ளது.

பட்டா மாறுதல் புகார்


உங்களுக்கு பட்டா மாறுதலில் பிரச்சனை ஏற்பட்டால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் மாறுதல் செய்யப்பட்ட விண்ணப்ப நகல் எடுத்து கொண்டு கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இரண்டாம் பட்சமாக வட்டாட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும். மூன்றாவதாக வருவாய் கோட்டாட்சியரிடமும் நான்காவதாக மாவட்ட வருவாய் அலுவலரிடமும் மனுக்கள் கொடுக்க வேண்டும். இதற்கு மேல் அனைத்து மனுக்களின் நகல் கொண்டு மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் மனு கொடுக்கலாம்.

மேற்கண்ட வழிமுறையை பின்பற்றி பட்டா மாறுதல் செய்ய முடியவில்லை அல்லது கடினம் என்றால் தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ் மனு கொடுக்கலாம். அதன் format பின்வருமாறு.

இதையும் பார்க்க: சீலிங் நிலம்

தலைப்பு

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 6 உட்பிரிவு 1 கோரிக்கை மனு என குறிப்பிட வேண்டும் ( வலது பக்கத்தில் கோர்ட் ஸ்டாம்ப் கட்டாயம் ).

பெயர்

மனுதாரர் பெயர்,

முகவரி.

பெறுநர்

திரு. பொது தகவல் அலுவலர்,

வட்டாட்சியர் அலுவலகம்,

முகவரி.

மதிப்பிற்குரிய ஐயா,

நான் கடந்த மாதத்தில் பட்டா பெயர் மாற்ற இ சேவை மையம் மூலம் விண்ணப்பித்திருந்தேன். அதன் விண்ணப்ப எண் ---------- மற்றும் தேதி --------- . இதுநாள் வரை பட்டா மாற்றம் செய்யாமல் இருக்கின்றது. எனக்கு சில தகவல்கள் தேவை. அதன் விவரம் பின்வருமாறு.

1. பட்டா மாற்றம் விண்ணப்பித்து எவ்வளவு நாட்களில் மாறுதல் நடக்கும்.

2. மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.

3.  கால தாமதம் ஆவதற்கு காரணங்கள்.

குறிப்பு

முழு புல எண்ணை கொண்ட நிலங்களுக்கு 15 நாட்களும் உட்பிரிவு செய்யப்பட்ட நிலங்களுக்கு 30 நாட்களும் எடுத்து கொள்ள வேண்டுமென்று வருவாய்த்துறை ஆணை எண் 210 சொல்கிறது.

இதையும் பார்க்க: மோசடி பத்திரப்பதிவு