மோசடி பத்திரப்பதிவு

மோசடி பத்திரப்பதிவு, மோசடி பத்திர பதிவு ரத்து - பத்திரப்பதிவு துறையில் தான் இந்த நேரத்தில் அதிகமாக மோசடிகள் வருவது என்று நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன. உதாரணமாக நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமிப்பு, போலியாக ஆவணம் தயாரித்து மற்றவர் நிலங்களை அபகரித்து கொள்வது மற்றும் பல. ஆனால் அதிகமாக பவர் பத்திரம் மூலம் தான் இங்கே பல மோசடி பத்திரங்கள் பதிவாகியுள்ளன. ஏனென்றால் முதல்வர் மற்றும் முகவர் என இரண்டு உரிமையாளர்கள் இருப்பதனால் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

மோசடி பத்திரப்பதிவு


சமீபத்தில் பதிவு துறையின் சுற்றறிக்கையில் பவர் பத்திரம் மோசடி குறித்த செய்திகள் ஏராளமாக உள்ளது. ஒரிஜினல் சொத்தின் சொந்தக்காரர் முதல்வர் என்றும் அவர் நியமிக்கும் நபர் முகவர் என்று அழைக்கலாம். இப்போது முதல்வர் அவர்கள் முகவருக்கு எல்லா விதமான பெர்மிஸ்ஸின் கொடுத்த பின்பு முகவர் முதல்வருக்கு தெரியாமல் லைப் செர்டிபிகேட் தயாரித்து விற்பனை செய்ய முயன்றால் அந்த ஆவணத்தை ரத்து செய்யும் முறை மாவட்ட பதிவாளருக்கு உண்டு.

இதையும் பார்க்க: சீலிங் நிலம் என்றால் என்ன

மேலும் முதல்வர் அவர்கள் இல்லை என்றால் முகவர் அவர் உயிரோடு இருக்கிறார் என்று லைப் செர்டிபிகேட் வாங்கி விற்க முயன்றால் அல்லது பதிவு செய்தால் 1908 சட்டம் பிரிவு 83 இன் கீழ் அந்த ஆவணம் தயாரித்தவருக்கும் இவருக்கும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த விளக்கங்களை கண்காணிக்கும் பதிவாளர் அவர்கள் அந்த பத்திரம் இனிமேல் எங்கும் பதிவு செய்யக்கூடாது எனவும் மற்ற இதர காரணங்களை அந்த பத்திர பேப்பரில் கீழ் புறமோ அல்லது புதிய வெள்ளை பேப்பரில் மென்ஷன் செய்திருக்க வேண்டும்.

பவர் ஆஃப் அட்டர்னி

பரிவர்த்தனை பத்திரம் என்றால் என்ன

Tnreginet