பதிவு சட்டம் 77A மற்றும் 77B

பதிவு சட்டம் 77A மற்றும் 77B ( section 77A of regsistration act tamil nadu judgments pdf ) - பத்திரப்பதிவுத்துறையில் தொடர்ந்து போலியாக பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வரும் மனைகளின், நிலங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பதிவுத்துறை சார்ந்த அமைச்சர், தலைவர் மற்றும் ஐஜி ஆகிய அதிகாரிகள் தொடர்ந்து இதற்கு பல்வேறு சுற்றறிக்கைகள் அவ்வப்போது மாவட்ட மற்றும் சார் பதிவாளர்களுக்கு வெளியிடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சுற்றறிக்கைகளில் சொல்லப்பட்டு வருகின்றது.

பதிவு சட்டம் 77A மற்றும் 77B


இந்த பதிவு சட்டம் 77A என்பது மாவட்ட பதிவாளர்கள் போலியான ஆவணம் என விசாரணை மூலம் தெரியவந்தால் அதனை உடனடியாக ரத்து செய்யும் உரிமை இருக்கிறது என்று இந்த 77A திருத்த சட்டம் சொல்கிறது. எதிர்மனுதாரர் மாவட்ட பதிவாளர் கொடுத்த தீர்ப்பை மேல்முறையீடு செய்ய சட்ட திருத்தம் 77B உபயோகித்து கொள்ளலாம்.

இதையும் பார்க்க: உறுதிமொழி பத்திரம் என்றால் என்ன

மாவட்ட பதிவாளர் இந்த போலியான ஆவணம் குறித்த நடவடிக்கைகளில் கவனம் காட்டவில்லை என்றால் சிவில் நீதிமன்றம் செய்து வழக்கு தொடுக்கலாம்.

இதையும் பார்க்க: மோசடி பத்திரப்பதிவு