பத்திரத்தில் க ச எண் என்றால் என்ன

பத்திரத்தில் க ச எண் என்றால் என்ன மற்றும் விரிவாக்கம் ( க.ச எண், பு.ஏ எண், அ.பு.ச எண் என்றால் என்ன ) - எந்த ஒரு நிலமாக இருந்தாலும் அதற்கு பத்திரம் என்பது கட்டாயமாக இருக்க வேண்டும். அதிலும் மூல பத்திரம் எனப்படும் தாய் பத்திரம் என்பது மிகவும் அவசியமாகும்.

பத்திரத்தில் க ச எண் என்றால் என்ன


அந்த தாய் பத்திரத்தில் கடைசி பக்கம் அல்லது ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் சொத்து விபரம் என்று இருக்கும். அதில் ஊர், வருவாய் கிராமம், சார் பதிவாளர் அலுவலகம், புல எண், உட்பிரிவு எண், சொத்தின் எல்லைகள், செக்குபந்தி மற்றும் மற்ற விவரங்களை எழுதி இருப்பார்கள்.

இதையும் பார்க்க: மோசடி பத்திரப்பதிவு

ஒரு சில பத்திரத்தில் க. ச எண் என்று போடப்பட்டிருக்கும். இந்த எண் தற்போது உள்ள சர்வே எண்ணை குறிக்கும். காலம் சர்வே எண் என்பது இதன் விரிவாக்கமாகும். இதேபோல பு.ஏ, அ.பு.ச, தீ.ஹெ, நெ.காலை என வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருப்பார்கள்.

இதையும் பார்க்க: பவர் ஆஃப் அட்டர்னி