ஊராட்சி தொழில் வரி online - ஊராட்சிகளில் தொழில்களுக்கு மட்டும் வசூலிக்கப்படும் வரி தொழில் வரியாகும். ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள கிராமங்களே ஊராட்சி வரி செலுத்த முடியும். மற்ற பஞ்சாயத்துகள் நகரம், பெருநகரம் சேர்ந்தவையாகும்.
ஊராட்சிகள் சட்டம் 1994 இல் பிரிவு 159 உட்பிரிவு 2 இன் படி கிராம ஊராட்சிகளுக்கு கட்டுப்படும் அனைத்து குக்கிராமங்கள் நிச்சயம் தொழில் வரியை கட்ட வேண்டும். மேலும் அதன் உரிமத்தையும் 159 உட்பிரிவு 4 யை பயன்படுத்தி வாங்கி கொள்ளலாம்.
மொத்தமாக 82 வகையான தொழில்களுக்கு தற்போது வரையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மொத்த விவரங்கள் பஞ்சாயத்து அலுவலகத்திலியே கேட்டால் சொல்லி விடுவார்கள்.
கிராம பஞ்சாயத்து தலைவர் எடுக்கும் முடிவு இறுதியானது. ஒரு தொழில் உரிமம் கொடுக்கவும் நிராகரிக்கவும் அவருக்கு முழு உரிமை உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை வீதம் வரிகளை கட்ட வேண்டும். ரூபாய் 100 இல் தொடங்கி ரூபாய் 5, 000 வரை தொழிலுக்கேற்ப வசூல் செய்யப்படும். வருடத்திற்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் நான்கில் ஒரு பங்கு அபராதம் கட்ட நேரிடும்.