நம்பர் பிளேட் மூலம் வாகன உரிமையாளர் விவரங்கள்

நம்பர் பிளேட் மூலம் வாகன உரிமையாளர் விவரங்கள் - வாகன எண்ணை வைத்து மட்டுமே யார் அதற்கு ஓனர் என்று கண்டுபிடிக்க முடியுமா என்கிற கேள்விகள் ஏராளமாக ஒவ்வொரு மனிதரின் மனதிலும் எழும். நம்பர் பிளேட் மூலம் எளிதாக ஒரு வாகனத்தின் உரிமையாளர் யார் என்பதனை ஒரு நிமிடத்திற்கு குறைவான நேரத்தில் நம்மால் பார்க்க இயலும். அதற்கான வசதி Parivahan கொண்டு வந்துள்ளது. முன்னர் எல்லாம் நாம் அதனை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் ஆர் டி ஓ ஆபீஸ் சென்று தான் பார்க்க இயலும். அது மட்டுமா அந்த பதிவு எண்ணின் வாகனத்தை ஏன் கேட்கிறீர்கள் மற்றும் இதர காரணங்களை சொன்னால் தான் அந்த வாகனத்தின் ஓனர் யார் என்று கண்டுபிடிக்க முடியும்.

வாகன உரிமையாளர் கண்டுபிடிக்க

1. இதில் முதலில் வாகன ஓட்டிகள் அல்லது வாகனம் டீடெயில்ஸ் தெரிந்து கொள்ள Parivahan செல்ல வேண்டும் 

2. அதில் வாகன எண், மாநிலம் மற்றும் அருகில் உள்ள ஆர் டி ஓ அலுவலகம்

நம்பர் பிளேட் மூலம் வாகன உரிமையாளர் விவரங்கள்


3. இதனை பதிவு செய்த பின்னர் வாகன ஓட்டியின் பெயர், வாகன எண் மற்றும் எந்த வருடம் பதிவு செய்யப்பட்டது என மூன்று விவரங்கள் மட்டுமே அதில் காணப்படும்.

வாகன எண்ணை வைத்து கொண்டு யார் வண்டியின் ஓனர் என்று கண்டுபிடிக்கமுடியுமா ? 

இதனை தவிர்த்து வேறு ஏதாவது விவரங்கள் தெரியவேண்டுமென்றால் நீங்கள் அந்த வாகனத்திற்கு உரிமையாளராக தான் இருக்க வேண்டும். அப்போது தொலைந்த ஆர் சி புக் நகல், இன்சூரன்ஸ் டீடெயில்ஸ் மற்றும் உரிமையாளர்களின் மொத்த விவரங்கள் அனைத்தும் கிடைக்கும்.

மற்றுமொறு வழி என்றால் தொலைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பினால் வாகனங்கள் விவரம் வந்துசேரும் . இதற்கு கட்டாயம் எந்த தொலைபேசி எண்ணை நீங்கள் பதிவு செய்திர்களோ அந்த எண்ணின் மூலம் தான் குறுஞ்செய்தி வரும். இதற்க்கு உங்கள் தொலைபேசியில் VAHAN என டைப் செய்து வண்டி எண் போட்டு 7738299899 என்கிற எண்ணிற்கு அனுப்பினால் அனைத்து டீடெயில்ஸ் வந்து அடையும். உங்களுடைய போன் நம்பர் தவறுதலாக இருந்தால் அந்த எண்ணிற்கு எந்த வித செய்தியும் Parivahan லிருந்து வராது. நம்பர் பதிவு செய்ய அல்லது தொலைந்த போன நம்பர் யை புதுப்பிக்க நேரடியாக ஆர் டி ஓ ஆஃபீஸிற்கு செல்ல வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் தொலைந்தால் என்ன செய்வது

டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி