டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி

டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி - தமிழ்நாடு டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க நாம் ஆன்லைனில் அப்ளை செய்து வாங்க முடியும். இதனால் நாம் RTO அலுவலகத்திற்கு சென்று பார்க்க அவசியம் இல்லை. லைசென்ஸ் ரெனீவல் எடுக்கும் நபர் மொத்தமாக ஏழு ஸ்டேஜ் யை கடந்த பின்னர் தான் புதுப்பிக்க முடியும். அவைகள் பின்வருமாறு,

டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி


1. விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல் 

2. ஆவணங்கள் சரிபார்ப்பு 

3. புகைப்படமும் அதில் கையொப்பமும் இட்டு இருத்தல் 

4. டெஸ்ட் ஸ்லாட் புக்கிங் 

5. payment 

6. verify payment 

7. பிரிண்ட் 


சாரதி இணையதளம் மொத்தமாக 18 வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதில் முதலில் வருவதே லைசென்ஸ் புதுப்பித்தல் தான். நாற்பது வயதிற்கு மேலே உள்ள நபர் புதுப்பிக்க வேண்டுமென்றால் மெடிக்கல் சான்றிதழும் மற்றும் Form 1-A பில்லப் செய்தல் அவசியம்.

இந்த form அந்த இணையதளத்திலே இருக்கும். அதனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Parivahan வெப்சைட் சென்ற உடன் Driving Licence ரெனீவல் என்பதனை சூஸ் செய்து உங்கள் லைசென்ஸ் நம்பர் மற்றும் சரியான பிறந்த தேதியை மட்டும் போட்டால் உங்கள் போட்டோ மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் கீழே காட்டி விடும். அது உங்களுடையது தானா என்று செக் செய்து விட்டு proceed கொடுத்து விட்டு ரூபாய் 450 லிருந்து 500 வரையும் கட்டணம் வசூல் செய்யப்படும்.

இதற்கு ஆவணங்களாக லைசென்ஸ் முன்புறம் மற்றும் பின்புறம் புகைப்படம் அப்லோட் செய்யணும். பிறகு appointment சூஸ் செய்து அன்றைய தேதியில் மற்றும் நேரத்தில் RTO அலுவலகத்திற்கு சென்று உங்கள் புது அட்டையை பெற்று கொள்ளலாம். ஆர் டி ஓ அலுவலகத்திற்கு செல்லும்போது உங்கள் ஆதார் அட்டை, லைசென்ஸஸ் அட்டையை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் தொலைந்தால் என்ன செய்வது