ஓட்டுநர் உரிமம் தொலைந்தால் என்ன செய்வது

ஓட்டுநர் உரிமம் தொலைந்தால் என்ன செய்வது - இதனை ஆங்கிலத்தில் Driving License என்பார்கள். இந்த உரிமம் இருந்தால் தான் நாம் நம்முடைய வாகனத்தை எடுக்க முடியும். ஏனென்றால் உரிமம் என்பது ஒரு தனிப்பட்ட நபர் ஒரு முழுமையான வாகனத்தினை இயக்க முடியும் என்பதை இந்த உரிமம் காட்டும். பொதுவாக லைசென்ஸ் எவ்வளவு உஷாராக வைத்து கொள்ள முடியுமோ அந்தளவு உஷாராக வைத்து கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் நகல் எடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த இரண்டுமே செய்யாத நிலை ஏற்பட்டால் திரும்பவும் இந்த கார்டு பெறுவது கஷ்டமே.

ஓட்டுநர் உரிமம் தொலைந்தால் என்ன செய்வது


தொலைந்த ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி

முன்னர் எல்லாம் தொலைந்த அட்டை பெறுவதற்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று கம்பளைண்ட் செய்ய வேண்டும். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் RTO verify செய்து பின்னர் உங்கள் லைசென்ஸ் வாங்கி கொள்ள வேண்டும். ஆனால் இப்போது ஆன்லைனில் அப்ளை செய்து கொள்ளும் வசதி வந்து விட்ட காரணத்தினால் நாம் அங்கே வாங்கி கொள்ள முடியும்.

1. முதலில் நீங்கள் Parivahan வெப்சைட் சென்று அதில் ஆன்லைன் சேர்விசெஸ் என்பதை செலக்ட் பண்ணுங்கள் 


2. அப்படி செலக்ட் செய்து உங்கள் மாநிலத்தினை தேர்வு செய்யவும்


3. நெக்ஸ்ட் other services இல் சென்று DL சர்ச் கொடுத்தால் உங்கள் பிறந்த தேதி மற்றும் உங்கள் பெயர் மட்டுமே சம்மந்தப்பட்ட கட்டத்தில் போட்டால் உங்களுடைய லைசென்ஸ் இல் உள்ள நம்பர் காட்டும். அதனை வைத்து டூப்ளிகேட் கார்டு ஆன்லைனில் வாயிலாக அப்ளை செய்து கொள்ள முடியும்.


வாகன பெயர் மாற்றம் செய்வது எப்படி