நில அளவை கணக்கீடுகள் Pdf - நில அளவை என்பது நிலத்தின் அளவீடுகளை கணக்கீடு செய்வது மற்றும் குறியீடுகள் தான். இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் நாம் ஒரு நிலத்தினை அளவீடுகளை சென்ட், ஏக்கர், சதுர அடி, சதுர மீட்டர், ஹெக்டர், கிரௌண்ட் மற்றும் ஏர்ஸ் என்று கணக்கீடு செய்கிறோம். பட்டா ஆவணத்தில் ஹெக்டர் மற்றும் ஏர்ஸ் மட்டுமே காணப்படும். அதனை நாம் சென்ட் அல்லது சதுர மீட்டருக்கு கன்வெர்ட் செய்து கொள்ளலாம்.
நில அளவைகள் Pdf Download
1. 1 சதுர அடி எத்தனை மீட்டர் 0.3048 ஆகும்
2. 1 மீட்டர் எத்தனை அடி 3.28
3. ஒரு ஏக்கர் எத்தனை சதுர அடி 43560
4. 1 குழி எத்தனை அடி 144 சதுர அடியாகும்
5. 10 குழி எத்தனை சதுர அடி - 1440
6. 1 சென்ட் - 435.6 சதுர அடி
7. 1 சென்ட் - 40.45 சதுர மீட்டர்
8. 1 ஏக்கர் - 100 சென்ட்
9. 1 ஹெக்டர் - 247 சென்ட் மற்றும் 100 ஏர்ஸ்
10. 1 ஏக்கர் - 4045 சதுர மீட்டர்
11. 1 ஏக்கர் - 40.5 ஏர்ஸ்
12. 1 ஏர்ஸ் - 2.47 சென்ட், 100 சதுர மீட்டர் மற்றும் 1076 சதுர அடி
மேலே உள்ள அளவீடுகளை வைத்தே நாம் நம்முடைய நிலத்தினை அலுவைகள் மற்றும் பரப்பளவு தெரிந்து கொள்ளலாம். இன்றைய சூழ்நிலையில் ஒரு இடத்தினை நாம் வாங்குகிறோம் என்றால் அது அதனை சதுர மீட்டர் அல்லது எத்தனை சென்ட் என்று தான் கேட்போம். இந்த இரண்டு வார்த்தைகள் மட்டுமே அதிகமாக நாம் உபயோகிக்கிறோம்.
தமிழ்நாடு அரசு நில அளவை ஆவணம் பட்டா
தாய் பத்திரத்தில் ஒவ்வொன்றாக எத்தனை அடி கணக்கு முதல் கடைசி வரையும் விவரங்கள் இருக்கும். ஆனால் பட்டா என்பது அப்படி இல்லை. பட்டாவில் தீர்வை, நன்செய், புன்செய், நில உரிமையாளர்கள் மற்றும் பட்டா எண் இவைகள் மட்டுமே தோன்றும். அதில் பரப்பு இடத்தில் இருக்கும் இடம் தான் நாம் அளவீடு செய்ய போகிறோம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படத்தில் 23 புல எண் மற்றும் உட்பிரிவு ஒன்றில் 0 - 34.00 என்று இருக்கிறது. முதலில் வரும் எண்ணை விட்டுவிட்டு 34 எண்ணோடு 2.47 பெருக்கினால் வருவது தான் உங்கள் நிலத்தின் சென்ட். அது எண் 2.47 என்றால் ஒரு ஏர்ஸ் என்றால் 2.47 சென்ட் ஆகும். மொத்தமாக கணக்கிட்டால் புல எண் 23 இல் உட்பிரிவு 1 இல் 83.98 சென்ட் இருக்கிறது.