-->
சொத்தில் பாதை சட்டம், விவசாய நிலத்திற்கு பாதை

சொத்தில் பாதை சட்டம், விவசாய நிலத்திற்கு பாதை

சொத்தில் பாதை சட்டம், விவசாய நிலத்திற்கு பாதை - பட்டாவிலும் பத்திரத்திலும் நீங்கள் பதிவு செய்யும்போது அந்த இடத்தில் நிலவியல் அல்லது பூஸ்திதி பாதை வருகிறதா என்று முன்கூட்டியே ஆராய வேண்டும். நீங்கள் பதிவு செய்யும்போது எந்த வித பிரச்சனையும் இல்லாமல் இந்த இடத்தில் பாதை வருகின்றது என்று அரசு சொன்னால் நீங்கள் செய்யவேண்டியது என்னென்ன என்று பார்க்கலாம்.

சொத்தில் பாதை சட்டம், விவசாய நிலத்திற்கு பாதை


நீங்கள் சரியாக பதிவு செய்த நிலத்தில் திடீரென்று அரசாங்கம் அந்த இடத்தில் தார் சாலை, மேம்பாலம் அல்லது உள்ளாட்சி வழி என போட்டால் அல்லது சாலை அமைக்கும் ஏற்பாடுகள் செய்கிறார்கள் என்றால் நீங்கள் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இவர்களிடம் மனு கொடுக்க வேண்டும். எப்படியும் அந்த இடத்தில் சாலை அமைக்க வேண்டும் என்றால் நிச்சயம் அமைக்கப்படும் என்று அவர்களும் சொல்வார்கள்.

இதையும் படிக்க: Villangam Download

இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யலாம். 18.07.2022 மதுரை உயர்நீதிமன்றம் ஒரு புதிய யுக்தியை கையாண்டுள்ளது. அது என்னவென்றால் தனியார் நிலத்தில் சாலை அமைத்தால் அதற்கு முன் அனுமதி நில உரிமையாளரிடம் இருந்து பெறுதல் அவசியமென்றும் அதே சமயத்தில் நில ஆர்ஜிதம் சட்டம் அடிப்படையில் அந்த நிலத்தினை முறையாக கையகப்படுத்தி அதற்குண்டான நஷ்ட ஈட்டினை கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: வில்லங்க சான்றிதழ் விண்ணப்ப படிவம்