சான்றளிக்கப்பட்ட நகல்

சான்றளிக்கப்பட்ட நகல் - இந்த சான்றளிக்கப்பட்ட நகல் பொதுவாகவே தாய் பத்திரம் தொலைந்தால் அல்லது பிரச்சனைகளில் மாட்டி கொண்டால் தேவைப்படும். மூல பத்திரத்திற்கு வேறு சொல் தாய் பத்திரம் எனவும் ஆங்கிலத்தில் Parentory Documentary எனவும் அழைக்கப்படுகிறது. நீங்கள் எந்த வித சொத்தை வாங்கினாலும் அதற்கு முன்னர் இந்த மூல பத்திரம் ஒன்று இருக்கும். அதனை வைத்து தான் நாம் சொத்தை பரிமாற்றம் செய்வதும் கிரையம் செய்வதும் இருக்கும். ஒருவரிடம் நிலத்தை வாங்கும்போது அந்த இடத்திற்கு EC போட்டு பார்க்க வேண்டும். ஏனென்றால் ஒருவேளை அடமானம் அந்த இடத்தின் மேல் செய்து பணம் பெற்று உங்களிடம் தெரியாமல் அதனை விற்க முயன்றால் எதிர் காலத்தில் வாங்கும் நபருக்கு பிரச்சனை ஏற்படும்.

சான்றளிக்கப்பட்ட நகல்


பதிவு துறையில் பதிவு செய்யும்போது மூல பத்திரம் அவசியமா ?

25.04.2012 அன்று விட்ட சுற்றறிக்கை இல் கட்டாயம் பதிவு செய்யும்போது அசல் ஆவணங்கள் தேவை என்று கூறியது. ஏனென்றால் மோசடி பத்திரம் பதிவு செய்வதை தவிர்க்கவும் சரியான நபருக்கு பதிவு செய்வதும் இருக்கும் எனவும் அதில்இருந்தது. நாளடைவில் அந்த சுற்றறிக்கை மாறி பதிவு செய்யும்போது அசல் டாக்குமெண்ட்ஸ் தேவை இல்லை எனவும் கூறி இருந்தார்கள். மொத்தமாக கணக்கிட்டால் இரண்டு விதமாக மூல பத்திரம் நம்மிடம் கிடைக்காது.

1. தொலைத்துவிட்ட ஆவணம் 

2. பாகப்பிரிவினை செய்யும்போது அதில் யாரோ ஒருவர் பத்திரங்கள் வைத்து கொண்டு இருப்பது.

மேலே கூறிய இரண்டு  வழிகளில் தான் உங்கள் ஆவணங்கள் மாட்டி கொண்டு இருக்கும். அப்படி இருக்கும்போது எப்படி உங்கள் இடத்தினை ரெஜிஸ்டர் செய்வது  உங்கள் மனதில் எழும்.

தாய் பத்திரம் தொலைந்துவிட்டது நான் எவ்வாறு பதிவு செய்வது ?

அப்படி தொலைந்துவிட்டது என்றால் போலீஸில் புகார் அளித்து அதன் கம்பளைண்ட் நகல், CSR நகல், நோட்டரி வக்கீலிடம் Affidavit மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல் என அனைத்தும் சப்மிட் செய்ய வேண்டும் 

பத்திரம் வேறு ஒருவரிடம் மாட்டி கொண்டது என்ன செய்வது ?

இப்போது ரெஜிஸ்டர் செய்வது  கஷ்டம் தான் என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் Tnreginet வெப்சைட் சென்று உங்கள் ஆவணத்தின் எண் என்டர் செய்து சான்றளிக்கப்பட்ட நகல், வில்லங்க சான்று உங்கள் ஐடென்டிட்டி போன்றவைகள் எல்லாம் கொடுத்து ரெஜிஸ்டர் செய்யலாம்.

நகல்

மூலப்பத்திரம் பெறுவது எப்படி