மின்சாரம் புகார் மாதிரி கடிதம்

மின்சாரம் புகார் மாதிரி கடிதம் - அன்றாடம் நாம் உபயோகிக்கும் மின்சாரம் இல்லையென்றால் நம் வேலையே செய்ய முடியாது என்று சொல்லலாம். ஏனெனில் மின்சாரத்தின் தேவை இன்று பெரிய அளவில் நிற்கிறது. தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மின்சாரம் தற்போது உறுதுணையாக உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு நாள் இல்லை ஏன் ஒரு மணி நேரம் மட்டுமே மின்சாரம் இல்லையெனில் நாம் சிரமத்துக்கு உள்ளாகிறோம்.

மின்சாரம் புகார் மாதிரி கடிதம்


நமது அரசாங்கமானது மின்சாரம் சம்மந்தப்பட்ட புகார்கள் ஏதாவது இருந்தால் கீழ்காணும் வழிகளை பின்பற்றுங்கள் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1. புகார் கடிதம் நேரில்

2. தொலைபேசி எண்

3. இணையவழி வாயிலாக.

சாலை வசதி வேண்டி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்

1. புகார் கடிதம்

மின்சார அலுவலகம் பக்கத்தில் இருந்தால் புகார்களை நேரிலே கொடுப்பது நல்லது. மின்சாரம் சம்மந்தபட்ட எந்த புகார்கள் இருக்குமாயின் அதனை நாம் கொடுக்க இயலும். உதாரணமாக மின்சார மீட்டர் பழுது அல்லது உடைந்து போனால், உயர் மின்னழுத்தம், தாழ்வு மின் அழுத்தம், மீட்டரில் தவறாக ரீடிங் காட்டுவது, மின் இணைப்பு துண்டிப்பு, மின் கம்பம் கீழே இருப்பது போன்ற பிரச்சனைகளை புகார் கடிதங்களாக கொடுக்கலாம். அதன் மாதிரி பின்வருமாறு.

விடுநர்

உங்கள் பெயர்,

முகவரி.

பெறுநர்

மின் ஆய்வாளர் அல்லது உதவி மின் பொறியாளர் அல்லது மின்வாரிய செயலாளருக்கு,

அலுவலகம் முகவரி.

பொருள்

உங்கள் தெரு மின்விளக்கு சரி செய்ய வேண்டி மின்வாரிய அலுவலருக்கு புகார் கடிதம் எழுதுக ( இது வெறும் எடுத்துக்காட்டுக்காக தான் ).

விளக்கம்

மதிப்பிற்குரிய ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். என் வீட்டில் உள்ள மீட்டர் பாக்ஸில் ரீடிங் தவறாக காட்டுகிறது. இதனால் மின் கட்டணமும் கூடிக்கொண்டே செல்கிறது. நானும் இதனை தற்போது தான் கவனித்தேன். இந்த பிரச்சனையை சரிசெய்து கொடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

2. தொலைபேசி எண்

மின்சாரத்துறை சம்மந்தமான அனைத்து புகார்களையும் ஒரே தொலைபேசி எண்ணை வைத்து மட்டுமே நம்மால் சரி செய்ய இயலும். 94987 94987 ( மின்சாரம் புகார் எண் ) இந்த எண்ணிற்கு போன் செய்து உங்கள் புகார் அல்லது பிரச்சனையை சொன்னால் உங்கள் போன் நம்பர் ரெஜிஸ்டர் செய்து விடுவார்கள். இதனால் அவர்கள் உங்கள் புகாரை எடுத்து கொண்டு ஒவ்வொரு முறையும் உங்கள் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புவர்.

3. இணையவழி ( ஆன்லைன் )

மூன்றாவதாக இணைய சேவையை பயன்படுத்தி ஆன்லைனில் புகார்களை கொடுத்து சரி செய்ய முடியும். Tangedco வெப்சைட் சென்று உங்கள் புகார் அல்லது பிரச்சனையை எழுதி 15 நாட்களுக்குள் செய்தி உங்களுக்கு ஆன்லைன் வாயிலாக வரும்.

குறிப்பு

இதில் இரண்டாவதாக உள்ள தொலைபேசி சேவை பயன்படுத்தினால் மிகவும் சரியாய் இருக்கும்.

தெருவிளக்கு வேண்டி கடிதம்