மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வது எப்படி

மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வது எப்படி படிவம் விண்ணப்பம் முகாம் online - மின் இணைப்பு இன்றைக்கு மிகவும் அத்தியாவசமாக ஒவ்வொரு வீட்டிற்கும் தேவைப்படுகிறது. அந்தளவு மின்சாரம் மக்களுக்கு இன்றி அமையாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. பொதுவாக ஒருவர் மின் இணைப்பின் பெயர் மாற்றுகிறார் என்றால் நிலம் விற்பனை, நிலம் ஒப்படைத்தல், நிலம் பரிமாற்றம் அல்லது பரிவர்த்தனை மற்றும் இதர காரணங்களுக்காக மாற்ற நேரிடும். ஆனால் அதிகமாக கீழ்க்கண்ட காரணங்கள் தான் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு வழி வகுக்கின்றன.

1. சொத்தின் உரிமையாளர் ஒரு வீட்டினை விற்கும் போது மின் இணைப்பு பெயர் மாற்றாமலே அந்த வீட்டை கிரையம் செய்துருப்பார். அப்போது வாங்கிய நபர் பின்னாளில் மிகவும் சிரமம் படுவார்.

2. 2007 க்கு பிறகு தான் TNEB கணினி மயமாக்கினர். அதனால் வீட்டில் குடியேறி இருந்தவர்கள் பெயரிலே TNEB பெயர் இருக்கும். அதாவது வீட்டு வாடகை இருந்தவர்கள் பில் கட்டும்போது அவர் பெயரிலே ரெஜிஸ்டர் ஆகி இருக்கும்.

3. 

மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வது எப்படி


நான் ஏற்கனவே ஒரு நிலத்தை  வாங்கி விட்டேன் அந்த நிலமும் என்னுடைய பெயருக்கு மாறி விட்டது. ஆனால் கிணறு என் பெயருக்கு மாற்ற முடிவவில்லை என்ன செய்வது ?

முதலில் பட்டா சிட்டா, அடங்கல், VAO சான்று, தனி வரைபடம், கூட்டு வரைபடம், பத்திரம் நகல் மற்றும் மனு எழுதி உங்கள் ஏரியா EE இடம் கொடுத்தால் ஒரு பத்து முதல் பதினைந்து  நாட்களுக்குள் இணைப்பு வர வாய்ப்பிருக்கிறது.

நான் கிரையம் மூலம் ஒரு சொத்தினை வாங்கி விட்டேன். அந்த இடத்திற்கு மின் இணைப்பு இருக்கிறது. ஆனால் பழைய உரிமையாளர் பெயரிலே ரெகார்ட்ஸில் காட்டுகிறது. இப்போது என் பெயர் மாற்ற என்ன செய்யலாம் ?

ஆன்லைனில் அப்ளை செய்யும் வசதியை தமிழக அரசு ஏப்ரல் 01, 2021 அன்று உருவாக்கப்பட்டது. ஆன்லைனில் tangedco.gov.in வெப்சைட் Form 2 பதிவிறக்கம்  செய்து பழைய உரிமையாளரிடம் ஒரு கையெழுத்து வாங்கலாம் அல்லது அவருடைய அனுமதி இல்லாமல் வாங்க வேண்டுமென்றால் Form 4 டவுன்லோட் செய்து முக்கிய ஆவணமான சொத்து வரி அதில் இணைத்து சப்மிட் செய்ய வேண்டும். கடைசியாக அப்ளை செலக்ட் செய்து உங்கள் விவரங்கள், சர்வீஸ் எண்கள் கொடுத்து ரூபாய் 300 செலுத்தினால் மின் இணைப்பு பெயர் மாறி விடும்.

குறிப்பு

இந்த Form 2 வில் இப்போது இருக்கிற உரிமையாளர் பெயர், தந்தை பெயர், EB முகவரி, சர்வீஸ் நம்பர், புதிய உரிமையாளர் பெயர், தந்தை பெயர் எல்லாம் பூர்த்தி செய்து விட்டு பழைய உரிமையாளரிடம் கையொப்பம் வாங்கி கொள்ளலாம்.

விவசாய மின் இணைப்பு 2024

ஈபி பில் ஸ்டேட்டஸ்