மின் இணைப்பு இடமாற்றம் விண்ணப்பம்

மின் இணைப்பு இடமாற்றம் விண்ணப்பம் - இதில் பெரும்பாலும் விவசாய நிலங்களை வைத்திருப்பவர்கள் தான் இடமாற்றம் செய்கின்றார்கள். மின் மீட்டர் இடமாற்றம் வேறு மின் இணைப்பு இடமாற்றம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் இடமாற்றத்தை செய்து கொள்ளலாம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

மின் இணைப்பு இடமாற்றம் விண்ணப்பம்


இதற்கு மனு, கடிதம் எழுதுவதை விட நேரடியாக அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். படிவம் 2 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதற்குண்டான கட்டணத்தையும் கட்ட வேண்டும். இதற்கு நில உரிமை சான்று, கிராம நிர்வாக அலுவலரால் தரப்படும் நான்கு எல்லை சான்று மற்றும் கூட்டு பட்டாவாக இருந்தால் அவர்களின் ஒப்புதல் அளித்த கையொப்பம் இட்ட சான்று இணைத்து கொடுக்க வேண்டும்.

இதையும் பார்க்க: வீட்டு மின் கட்டண விவரம்

குறிப்பு

இதற்கு கால அவகாசம் இடத்தினை பொறுத்து தான் அமையும். அதிகபட்சமாக ஒரு வருடம் கூட ஆகலாம்.

Tnebltd.gov.in.