மேய்க்கால் புறம்போக்கு என்றால் என்ன - மேய்க்கால் புறம்போக்கு என்பது ஆடு மாடு போன்ற கால்நடைகள் மேய்வதற்காக அரசாங்கமே ஒதுக்கக்கூடிய இடங்கள் தான் மேய்க்கால் என்போம். இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் பராமரித்து கொள்ளலாம் என்கிற நோக்கத்தோடு அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இது நாளடைவில் மேய்ப்பதற்கு அல்லாமல் தனிப்பட்ட முறையில் அந்த இடங்களை உபயோகித்து கொள்வதாக 2015 ஆண்டு உயர் நீதிமன்றம் கூறியது. அதாவது அந்த இடங்களிலே வீடுகள் மற்றும் கடைகள் கட்டி கொள்வது என மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் அதில் கூறப்பட்டுருந்தது.
சமீபத்தில் செப்டெம்பர் 16, 2021 ஆம் ஆண்டு வரைக்கும் கிட்டத்தட்ட 80, 000 குடும்பங்கள் வசிப்பதாக தகவல் வந்துள்ளது. அப்படி இருந்த போதிலும் மக்கள் அந்த இடத்தினை காலி செய்யாமல் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே அந்த இடத்திற்கு பட்டா வாங்கி இருந்தாலும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த இடங்களில் தொழிற்சாலை, கால்நடைகள் மேய்வதற்கும் மற்றும் சமூக பயன்பாட்டிற்கு தேவைப்படும் இடங்களை கட்டி கொள்வதற்கும் தேவைப்படுவதால் மக்கள் அங்கு காலி செய்ய வேண்டும் என கூறியது.
பட்டா சிட்டா
இதற்கு ஏற்பாடாக அரசாங்கம் அவர்களுக்கு மற்றொரு இடமும் வீடும் கொடுத்தால் மக்கள் எளிமையாக அந்த இடத்தினை காலி செய்து கொள்வர். விரைவில் இது குறித்த செய்திகளை உயர்நீதிமன்றம் அரசாணை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து விதமான புறம்போக்கு நிலங்களை அரசு கையகப்படுத்தும் எனவும் எதிர் பார்க்க படுகிறது. அதாவது நீர்நிலை இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். அதேபோல் களத்துமேடு, கல்லாங்குத்து போன்ற இடங்களையும் ஒவ்வொன்றாக கையகப்படுத்தி வருகின்றனர்.
நிலத்தை அளப்பது எப்படி