மரவள்ளி கிழங்கு விலை நிலவரம் 2024 இன்று ( maravalli kilangu vilai nilavaram ) - இந்த கிழங்கினை ஆரவள்ளி அல்லது கப்பக்கிழங்கு என்றும் சிலர் சொல்வார்கள். மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த கிழங்கினை பயிரிடை செய்வார்கள். டிசம்பர் முதல் ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்ய உகந்த மாதங்களாகும். இந்த கிழங்குகள் 30 சென்டி மீட்டர் நீளம் வரையும் வளரக்கூடியது ஆகும். இதனை நீர்ப்பாசனம், மானாவாரி நிலங்களில் பயிர் நடலாம். இதனை அறுவடை செய்த உடன் மூன்று நாட்களுக்குள் சாப்பிட்டால் நல்லது. அதற்கு மேல் இந்த கிழங்குகள் சாப்பிடுவதற்கு அல்லது தொழிற்சாலைக்கு உகந்தது ஆகாமல் போய்விடும்.
குச்சி கிழங்கு, குச்சி வள்ளி கிழங்கும் இந்த மர வள்ளி கிழங்கும் ஒரே தாவர குடும்பத்தினை சேர்ந்தவை ஆகும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெருமளவில் இதனை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது ஒரே நாளில் உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் 500 மில்லியன் கிழங்குகளை உபயோகித்து சாப்பிட்டு வருகின்றனர். 2012 ரிப்போர்ட் படி, இந்தியாவானது வருடத்திற்கு சுமார் 87 லட்சம் டன் மரவள்ளி கிழங்குகளை உற்பத்தி செய்கிறது.
மிளகு 1 கிலோ விலை 2024
இதனை பெரும்பாலும் மாவு தயாரிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக ஜவ்வரிசி தயாரிப்பதற்கு இது மூலப்பொருளாக அமைகிறது. இதில் 300 கிலோ கலோரி கொண்டுள்ளதால் இவற்றை அதிக மக்கள் சாப்பிட்டு வருகின்றனர்.
பயன்கள்
1. கண் பார்வைக்கு நல்லது.
2. செரிமானத்திற்கு ஏற்றது.
3. வைட்டமின், மினரல்ஸ், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் நார்சத்து அதிகம் உள்ளது.
4. எலும்பினை வலுவாக்கும் வல்லமை கொண்டது.
5. உடலில் உள்ள நீரை சமநிலையில் வைக்க உதவுகிறது.
மரவள்ளி கிழங்கு இன்றைய விலை நிலவரம் 2024
தற்போதைய ஜூன் 2022 ரிப்போர்ட் படி, ஒரு டன் மர வள்ளி கிழங்கின் விலை ரூபாய் 8500 லிருந்து 10000 வரையும் உழவர் சந்தைகளில் விற்கப்படுகிறது.
நல்லெண்ணெய் விலை 2024