மனை வரன்முறை திட்டம் 2024

மனை வரன்முறை திட்டம் 2024 கட்டணம் - அங்கீகாரம் இல்லாத மனை வரன்முறை திட்டம் தமிழக அரசு 2017 ஆம் ஆண்டு தொடக்கி வைத்தார்கள். இதனால் வரன்முறை இல்லாத மனைகளும் வரன் முறைப்படுத்த முடியும் என்ற நோக்கத்தோடு அரசாணையை அரசு வெளியிட்டது. ஒரு மனைக்கு வரன்முறை இருந்தால் மட்டுமே அந்த மனையில் வாழும் மக்களுக்கு அரசு சேவைகளும் மற்றும் வங்கி கடன் சம்மந்தப்பட்டவை முழுமையாக கிடைக்கும். ஆனால் ஒரு சிலருக்கு இது தெரியாமல் மனையை வாங்கி பிறகு அப்ரூவல் வாங்குவதற்கு திருந்தி கொண்டிருக்கின்றனர். உங்கள் மாவட்டத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் ரூபாய் 500 கட்டணமாக செலுத்தினாலே கிடைக்கும். இதற்கு உங்களிடம் சரியான ஆவணங்கள் இருந்தாலே போதுமானது.

அப்டேட் செப்டம்பர் 08, 2023

நகர்ப்புற வளர்ச்சி துறை மீண்டும் ஒரு அரிய வாய்ப்பினை மக்களுக்கு கொடுத்துள்ளது. அது என்னவென்றால் மனை வரன்முறைப்படுத்தாத மனைகள் பதிவு செய்திருந்தாலும் சரி அல்லது பதிவு செய்யவில்லை என்றாலும் சரி 29.02.2024 க்குள் வரன்முறைப்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. 20.10. 2016 க்கும் முன்னர் வரன்முறை படுத்தாத நிலங்கள் மற்றும் மனைகள் மட்டுமே இதற்கு தகுதி பெறும்.

மனை வரன்முறை திட்டம் 2024


அங்கீகாரம் இல்லாத மனை வரன்முறை

அங்கீகாரம் இல்லாத மனை வரன்முறை பட்டா மனைகளை பதிவு செய்வதற்க்கு 09.09.2016 அன்று தடை விதித்திருந்தது சென்னை உயர் நீதிமன்றம். இதனை எதிர்த்து ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சங்கம் வழக்கு தொடர்ந்தது. அதை ஏற்றுக்கொண்டது நீதிமன்றம். அரசாணை 78 இருந்து 172 ஆக மாறி 2017 மனை வரன்முறை சட்டத்தின்படி, பதிவு செய்யலாம் என்று கூறியிருந்தது. 03.11. 2018 வரையும் கால அவகாசம் கொடுத்து அதற்குள்ளேயே அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

பட்டா சிட்டா

மறுபடியும் இதனை எதிர்த்து ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சங்கம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை ஒன்றை அவ்வப்போது அனுப்பி இருந்தது. அதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அரசாணையை வெளியிட்டு அதில் 03.11.2018 ற்கு முன்னர் இருந்த மனைகள் அனைத்திற்குமே கூராய்வு கட்டணம் 500 ரூபாய்யை ஆன்லைன் அல்லது மண்டல அலுவலகம் மூலம் செலுத்தினால் உங்கள் மனையிற்கு அங்கீகாரம் பெற்று விடலாம் என்ற செய்தியை வெளியிட்டது.

பதிவுத்துறை புகார்