பதிவுத்துறை புகார் மற்றும் சந்தேகங்கள் 2024

பதிவுத்துறை புகார் மற்றும் சந்தேகங்கள் - பதிவுத்துறை அல்லது பத்திரப்பதிவு துறையும் ஒரே அர்த்தம் தான். எந்த ஒரு பத்திரத்தையும் அரசாங்க முறையில் பதிவு செய்வது இதன் நோக்கமாகும். அது கிரையம் ஆக இருந்தாலும் சரி அல்லது பவர் ஆக இருந்தாலும் சரி அதனை பதிவு செய்தல் நல்லது. ஒருவேளை பதிவு செய்யாத நிலையில் அல்லது பதிவு செய்யவில்லை என்றால் அந்த சொத்து உங்களிடம் சேர்வதென்பது சிக்கலே. ஏனென்றால் பதிவு செய்தால் எந்த ஒரு ஆவணமும் உங்களுடையது இல்லை என்றே கூற முடியாது. அது மட்டுமில்லாமல் சம்மந்தப்பட்ட நபரே எழுதி கையொப்பம் இட்டால் அந்த சொத்தானது கை விட்டு போகிறது என்றே சொல்லலாம்.

பதிவுத்துறை புகார்


இன்றைய காலகட்டத்தில் முறைகேடுகள் குவிந்த வண்ணம் உள்ளது இந்த பதிவுத்துறையில். ஆனால் மக்களுக்கு அது எப்படி கையாள்வது என்கிற குழப்பம் வந்து கொண்டே இருக்கும். உதாரணமாக உங்கள் சொத்து யாராவது உங்களுக்கு தெரியாமல் அபகரித்து விட்டாலோ அல்லது பதிவு செய்யப்பட்டாலோ மிகவும் எளிமையாக உங்கள் புகார்களை தெரிவிக்கலாம். அதனை எப்படி கையாள்வது யாரை மீட் பண்ணுவது அல்லது நீதிமன்றம் செல்ல வேண்டுமா என்கிற தெளிவான விளக்கங்களை அறிந்து கொள்ள தமிழக பத்திரப்பதிவு துறை இலவச எண்ணை உபயோகித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.

சதுர அடி கணக்கிடுவது எப்படி

மொத்தம் மூன்று தொலைபேசி எண்கள் கொண்டு உங்கள் புகார்கள் மற்றும் சந்தேங்கங்களுக்கு உபயோகித்து கொள்ளலாம்.

1. 9498452110

2. 9498452120

3. 9498452130

மேலே கொடுக்கப்பட்டுள்ள உங்கள் சந்தேகங்கள் என்னவேண்டுமானாலும் கேட்டு அறிந்து கொள்ளலாம். உங்கள் பத்திரம் பதிவு செய்தல், மோசடி, குளறுபடி, விடுதலை பத்திரம் மற்றும் பவர் பத்திரங்கள் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் தொடர்பு கொள்ள முடியாதென்றும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி நேரம் வரையும் தொடர்பு கொண்டு பேசலாம் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது.

Tnreginet