மாற்றுத்திறனாளி இலவச வீடு விண்ணப்பம் - வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் இலவச வீடுகள் நில ஒப்படை சட்டம், நில கையகப்படுத்தும் சட்டம், சீலிங் செய்யப்பட்டு அரசு நிலங்களுக்காக பயன்படாத நிலங்கள் மற்றும் தரிசு நிலங்கள் என வகைப்படுத்தி அதனை ஏழ்மை உள்ள மக்களுக்கு மற்றும் ஊனமுற்றோர்களுக்கு கொடுப்பதே இதன் நோக்கமாக உள்ளது.
அரசாணை நிலை எண் 541 நாள் 11.11.2022 அன்று வருவாய்த்துறை ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதில் ஏற்கனவே வழங்கியிருந்த வீட்டுமனைக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து 09.03.2023 கடித எண் 10827 இல் வீட்டு மனை மற்றும் பட்டா கோரி விண்ணப்பித்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் ஒட்டுமொத்தமாக 696 மனுக்கள் அனைத்து மாவட்டங்களையும் சேர்த்து பெறப்பட்டன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பங்கள் மற்றும் வீடு வழங்கப்படுகின்றது. அதில் நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். இல்லையென்றால் சங்கங்களில் நீங்கள் பதிவு செய்திருந்தால் அதிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
