கூட்டு பட்டா உரிமை

கூட்டு பட்டா உரிமை - ஒன்றிற்கும் மேற்பட்ட உரிமையாளர்களை கூட்டு உரிமையாளர்கள் எனலாம். ஒரு சொத்திற்கு ஒருவர் மட்டும் தான் உரிமையாளர் இருக்க முடியும் என்பதிலை. எத்தனை பேர் வேண்டுமென்றாலும் ஒரு நிலத்தின் உரிமையாளர்களாக இருக்க முடியும்.

கூட்டு பட்டா உரிமை


பூர்வீக சொத்தினை பிரிக்காமல் இருந்தால் தானாகவே வாரிசு அடிப்படையில் சொத்துக்கள் வந்து சேரும். இதுபோல சொத்துக்கள் அதிகளவில் ஒன்றிற்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் கொண்டிருக்கிறது.

கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி

கூட்டு பட்டா சொத்தினை பிரிக்க அல்லது விற்க முயன்றாலோ மற்றவர்களுக்கு தெரியாமல் இன்னொரு உரிமையாளர் செய்ய முடியாது. ஒன்று தனியாக பிரித்து உட்பிரிவு செய்து கொள்ள வேண்டும் அல்லது விடுதலை பத்திரம் எழுதி வாங்க வேண்டும். இந்த இரு வழிகளை பயன்படுத்தாமல் அந்த சொத்தினை வாங்க முடியாது.

கூட்டு பட்டா பிரச்சனை

ஒருவேளை கூட்டு பட்டா உள்ள ஒரு நபர் தனியாக மற்றவர்களுக்கு கிரயம் செய்துவிட்டால் அது சட்டப்படி செல்லாது. எளிமையாக அந்த சொத்தினை மற்றவர்கள் பெறலாம்.

கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி