வண்டிப்பாதை என்றால் என்ன

வண்டிப்பாதை என்றால் என்ன ( vandipathai in tamil pdf ) ( வண்டிப்பாதை புறம்போக்கு ) - வண்டி பாதை, வழிப்பாதை மற்றும் பொது பாதை இவ்மூன்றும் ஒன்றே தான். மக்கள் நடந்து போகவும் வண்டியில் செல்லவும் ஒரு பாதை தேவைப்படுகிறது. அந்த பாதையே வண்டிப்பாதை என்கிறோம்.

இதையும் படியுங்க: கிராம நில வரைபடம் Fmb Online

ஒரு குறிப்பிட்ட தெருக்களின் இடையில் இந்த பாதைகள் போடப்படுகின்றன. அரசு புறம்போக்கு நிலங்களில் நிலவியல் அதாவது Geology way என்பார்கள். இதே பட்டா உள்ள நிலங்களில் பூஸ்திதி என்று இருக்கும். இந்த இரண்டும் ஒரே அர்த்தம் தான்.

வண்டிப்பாதை என்றால் என்ன


கேள்வி 1

இந்த பாதை என்னிடம் உள்ள நிலத்தில் வந்துவிட்டது. இதனால் எனது இடம் அரசாங்கத்திற்கு சென்று விடுமா ?

பொது பாதை என்று அ பதிவேட்டில் குறிப்பிட்டு இருந்தால் நிச்சயம் அந்த இடம் பொது நோக்க பயன்பாட்டிற்காக அரசாங்கம் எப்போது வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளும்.

இதையும் படிக்கலாமே: நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை

கேள்வி 2

எனக்கு அந்த இடம் சேர்த்தால் தான் முழு நில அளவீடும் வருகிறது. கிராம நில வரைபடத்திலும் அளவுகள் சரியாக உள்ளது. அதிகாரிகள் மூலம் பூஸ்திதி பாதையை திரும்ப பெற முடியுமா ?

நிச்சயம் பெற முடியாது. நீங்கள் நீதிமன்றமே சென்றாலும் பொது பாதை, வண்டி பாதைக்கு உங்கள் நிலத்தில் இடம் விட்டே ஆக வேண்டும்.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: பட்டா ரத்து செய்வது எப்படி