கம்பு விலை இன்று 2024 - தானியங்களில் மிகவும் முக்கியமானதாக இந்த கம்பானது விளங்குகின்றது. அனைத்து விதமான மளிகை கடைகள், சந்தைகளில் எளிதாகவும் அதே சமயத்தில் குறைவாகவும் கிடைக்கிறது. மிகவும் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த கம்பினை நாம் மறந்து விட்டோம் என்றே கூறலாம். ஏனெனில் சத்தற்ற உணவுப்பொருட்களை நாம் சுவைக்காக மட்டுமே உண்கிறோம். ஆனால் அது எவ்வளவும் தீமையை தரும் என்பது பற்றி நோக்காமல் இருக்கிறோம்.
அதிகப்படியான வைட்டமின் சத்துக்கள், தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை இதில் இருப்பதால் நாம் உட்கொள்ளலாம். அரிசியை விட எட்டு மடங்கு வைட்டமின் சத்துக்கள், கொழுப்பு சத்துக்கள் குறைக்கவும் இது உதவுகிறது.
இதையும் படியுங்க: மரவள்ளி கிழங்கு விலை நிலவரம் 2024
இதனை வைகாசி, ஆனி ஆடி, மாசி மற்றும் சித்திரை போன்ற காலங்களில் பயிர் நடுவார்கள். ஏனெனில் அப்போது தான் பயிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். கிட்டத்தட்ட 80 முதல் 90 நாட்களுக்குள் இதனை அறுவடை செய்யலாம்.
இன்றைய கம்பு விலை ஒரு கிலோ மற்றும் ஒரு குவிண்டால் 2024
2020 ஆம் ஆண்டு ஒரு குவிண்டால் 3300 க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு குவிண்டால் கம்பு ரூபாய் 2700 முதல் 3500 வரையும் விற்கப்படுகின்றது. ஒரு கிலோ 25 முதல் 35 வரையும் செல்கிறது. இது கம்பின் வரத்து மற்றும் தரம் பொறுத்தே விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றது.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: நல்லெண்ணெய் விலை 2024