கடன் பத்திரம் எழுதும் முறை Pdf

கடன் பத்திரம் எழுதும் முறை Pdf - கடன் பத்திரம் என்றால் கடன் வாங்குவது  கொடுப்பது போன்றவை உறுதிப்படுத்த இருக்கக்கூடிய ஆவணமாக இது கருதப்படுகின்றது. இதில் பெரும்பாலும் கடன் வாங்குபவர் தான் அந்த கடன் பத்திரத்தினை வாங்க வேண்டும். சாதாரண பாண்டு மற்றும் 20 ரூபாய் ஸ்டாம்ப் கொண்ட பத்திரம் என இரண்டு உள்ளது. இதில் அதிகமாக 20 ரூபாய், 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய் பாண்டு பத்திரங்கள் கடன் பத்திரங்களாக எழுதப்படுகின்றது.

கடன் பத்திரம் எழுதும் முறை Pdf


இடதுப்புறத்தில் கடன் கொடுப்பவர் பெயர் மற்றும் முகவரி எழுத வேண்டும். பிறகு கீழே எதற்காக கடன் வாங்குகிறீர்கள், எப்போது கடன் தருவீர்கள், எவ்வளவு ரூபாய் வட்டி, எந்த தேதியில் வாங்கினீர்கள், முகவரி மற்றும் எந்த தேதியில் கொடுக்கப்போகிறீர்கள், சாட்சிகள் எத்தனை என விவரமாக இருக்க வேண்டும்.

இதையும் படிக்க: நில அளவை ஆவணம் பட்டா

இறுதியாக சுய உறுதிமொழியை ஒன்றை எழுதி ஒவ்வொரு பக்கத்திலும் கையொப்பம் இட வேண்டும். சாட்சிகள் இருந்தால் கூடுதல் பலம். மாத மாதம் கொடுக்கவேண்டிய வட்டியை கொடுத்த பின்னர் அதனை வரவு வைத்து கையொப்பம் ஒன்றை போட வேண்டும். ஒரு சிலர் ஆதாரமாக வீட்டு பத்திரம் அல்லது பட்டா ஆவணத்தை வாங்கி கொள்வர்.

இதையும் காண்க: தோராய பட்டா என்றால் என்ன