கடன் எந்த நாளில் வாங்கலாம்

கடன் எந்த நாளில் வாங்கலாம் அல்லது கடன் வாங்க உகந்த நாள் - கடன் என்பது தற்போது அனைவருக்குமே இன்றி அமையாத ஒன்றாக தான் உள்ளது. ஏனெனில் எல்லாருக்குமே பணம் ஒன்று தான் நடைமுறை வாழ்க்கையில் மிகவும் அவசியமாகிறது. யாருமே வேண்டுமென்றே கடன்களை பெற்றுக்கொள்வதில்லை. மாறாக அதுவும் ஒரு சுமையாக அமைகிறது என்றே கூறலாம். இருந்தாலும் வேறு ஏதும் வழி இல்லாத காரணத்தினால் வாங்கும் சூழல் ஏற்படுகிறது என்றால் அது உண்மையே.

கடன் எந்த நாளில் வாங்கலாம்


முதலில் கடன்களை வாங்கும் நபர் அதனை கண்டிப்பாக திருப்பி தர வேண்டுமென்ற நோக்கத்தில் முழு மனதோடு நினைத்து வாங்க வேண்டும். கிடைத்தால் போதுமானது அல்லது பிறகு பார்த்துக்கலாம் என்பதை முதலில் தவிருங்கள். ஏனெனில் கடன் ஒன்று வந்து விட்டால் ஒன்று மேல் ஒன்றாக தான் வந்து கொண்டே இருக்கும்.

நமது தேவைகளுக்காக தான் ஒவ்வொரு முறையும் நாம் வாங்கும் சூழல் ஏற்படுகிறது. கடன் கொடுப்பவர் நேரம், நாள் பார்க்காவிட்டாலும் வாங்குபவர் நிச்சயம் பார்க்க வேண்டும். கடன் கொடுப்பவர்கள் எந்த தினமும் கொடுக்கலாம் அல்லது எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம். அவர்களை தடுக்க அல்லது நிறுத்த முடியாது. ஆனாலும் கீழே கொடுக்கப்பட்ட நாட்களில் முடிந்த வரையில் அவர்களை கொடுக்க சொல்லி கோரிக்கை விடுங்கள்.

அடகு நகை மீட்க சிறந்த நாள் 2024

கடன் வாங்க உகந்த தினங்கள்

1. திங்கள்

2. புதன்

3. வியாழன்

4. வெள்ளி.

எந்த நட்சத்திரத்தில் வாங்க கூடாது

1. கார்த்திகை

2. புனர்பூசம்

3. அஸ்தம்

4. அவிட்டம்.

குறிப்பு

கடன் சீக்கிரம் அடைய செவ்வாய் தினத்தில் வரும் செவ்வாய் ஓரையில் உள்ள நேரங்களை பயன்படுத்துவது மிக்க சிறந்தது. மேலும் கடன் வாங்கியே ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில் உள்ளீர்கள் எனில் குளிகை நேரத்தினை தவிர்த்து மற்ற நேரங்களில் வாங்கலாம். குளிகை நேரம் என்பது திரும்பத்திரும்ப நடக்கக்கூடிய செயல்களை செய்ய ஏற்புடையது.

பங்குனி மாதம் வாடகை வீடு குடி போகலாமா